• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இருப்புப் பாதைக்கு சீனாவின் ஒதுக்கீடு
  2013-01-17 18:30:46  cri எழுத்தின் அளவு:  A A A   

நிலையான சொத்துக்கான 65 ஆயிரம் கோடி யுவானைச் சீன இருப்புப்பாதை அமைச்சகம் 2013ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யும். இதில் அடிப்படை கட்டுமானத்துக்காக 52 ஆயிரம் கோடி யுவானை செலவு செய்யும். 5 ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் தொலைவு புதிய இருப்புப் பாதைகள் போடப்படும். சீனத் தேசிய இருப்புப் பாதையின் வளர்ச்சி நிதியை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சீன இருப்புப் பாதை அமைச்சர் செங் குவாங் சூ 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனத் தேசிய இருப்புப் பாதைப் பணிக் கூட்டத்தில் கூறுகையில், சீனாவின் 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட இருப்புப் பாதை வளர்ச்சித் திட்டம், மேலும் தூண்டப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு, 203.5 கோடி மக்கள் சீனாவின் இருப்புப் பாதையின் மூலம் பயணம் மேற்கொள்வர். 403 கோடி டன் சரக்குகள் இருப்புப் பாதையின் மூலம் அனுப்பப்படும். இவை, கடந்த ஆண்டின் இருந்ததை விட முறையே 7.5 மற்றும் 3.5 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040