• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிசு
  2013-01-18 11:08:42  cri எழுத்தின் அளவு:  A A A   

2012ஆம் ஆண்டு சீனத் தேசிய அதியுயர் அறிவியல் தொழில் நுட்பப் பரிசு, 18ஆம் நாள் வெள்ளிக்கழிமை பெய்ஜிங்கில், ட்செங் ட்சே மின், வாங் சியாவ் மோ ஆகிய இரு மூத்த அறிஞர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அவர்களுக்கு பரிசு அளித்தார்.

அதியுயர் அறிவியல் தொழில் நுட்பப் பரிசைத் தவிர, தேசிய இயற்கை அறிவியல் பரிசு, தொழில் நுட்ப கண்டுபிடிப்புப் பரிசு, அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றப் பரிசு, சர்வதேச அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்புப் பரிசு ஆகியவை இந்தப் பரிசளிப்பு விழாவில் தொடர்புடைய முனைவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களில், அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த 5 அறிவியலாளர்களுக்கு 2012ஆம் ஆண்டு ஒத்துழைப்புப் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2012ஆம் ஆண்டுக்கான சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிசு வழங்கும் விழா அன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கட்சி மற்றும் அரசின் தலைவர்களான ஹு சிந்தாவ், ஷி ச்சின்பிங், வென் சியாபாவ், லீ க்கெச்சியாங், லியு யுன்சான் ஆகியோர் இப்பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040