• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2013ஆம் ஆண்டு சீனாவில் முக்கிய ஆய்வுத் துறைகள்
  2013-01-19 16:55:52  cri எழுத்தின் அளவு:  A A A   

தொலை விண்வெளி, ஆழ்ந்த கடல் மற்றும் தரையடி துறைகளுடன் தொடர்பான முக்கிய தொழில் நுட்பங்களை சீனா 2013ஆம் ஆண்டு ஆய்வுச் செய்ய வேண்டும். அதன் மூலமாக, வளர்ச்சிக்கான தொலைநோக்கு வாய்ப்புக்களை விரிவாக்க வேண்டும் என்று சீன அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் வான் காங் குறிப்பிட்டார்.

19ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்ற 2013ஆம் ஆண்டு சீனத் தேசிய அறிவியல் தொழில் நுட்பம் பற்றிய பணிக்கூட்டத்தில், 2013ஆம் ஆண்டுக்கான முக்கிய பணிகள் பற்றி பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

உலகின் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் முன்னணி, நாட்டின் தொலைநோக்கு வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை இலக்குகளாக கொண்டு, புதிய தலைமுறை தகவல் தொழில் நுட்பம், புதிய எரியாற்றல், உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், புதிய ரக மூலப்பொருள், முன்னேறிய தயாரிப்பு போன்ற துறைகளில் சீனா முக்கியமாக ஆய்வு செய்யும் என்று வான் காங் விளக்கினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040