• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சின்காய்-திபெத் இருப்புப்பாதைச் செயல்திறன் மேம்பாடு
  2013-01-21 09:20:42  cri எழுத்தின் அளவு:  A A A   
2012ஆம் ஆண்டின் இறுதிவரை, சீனாவின் சின்காய்-திபெத் இருப்புப்பாதையில் ஓடும் மொத்த தொடர்வண்டிகளின் எண்ணிக்கையில் பாதி, வேகத்தை உயர்த்தி, செயல்திறனை மேம்படுத்தியுள்ளன. அதிக பயணிகள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்தால் இவ்விருப்புப் பாதையின் ஆற்றல், கடந்த பல ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது.

புள்ளிவிபரங்களின்படி, 2012ஆம் ஆண்டு சின்காய்-திபெத் இருப்புப்பாதை வழியாக, 68 இலட்சத்து 30 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2இலட்சத்து 16 ஆயிரம் பேர் அதிகமாகும். கடந்த ஆண்டு 4கோடியே 2இலட்சத்து 20ஆயிரம் டன் எடையுள்ள சரக்குகள் இவ்விருப்புப்பாதை மூலம் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளன. இது 2011ஆம் ஆண்டில் இருந்ததை விட, 22இலட்சத்து 20ஆயிரம் டன் அதிகமாகும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040