
இஸ்ரேலின் 19வது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு 22ஆம் நாளிரவு முடிவடைந்துள்ளது. பொது மக்களின் கருத்துக் கணிப்பின்படி, நெத்தன்யாஹு தலைமையிலான லிகுட் கட்சியும், எமது தாயகக் கட்சியும் இணைந்த கட்சிக் கூட்டணி, 31 இடங்களைப் பெற்று அமைச்சரவையை உருவாக்கும் என தெரியவந்துள்ளது.
இக்கூட்டணி அடங்குகின்ற இஸ்ரேல் ஐக்கிய வலது சாரி கூட்டணி 61 அல்லது 62 இடங்களை மட்டுமே பெறக் கூடும். ஆனால் விதியின்படி, கூட்டணி அரசை உருவாக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவைப்படும். எனவே, நெத்தன்யாஹு அமைச்சரவையை உருவாக்குவது மிக கடினமாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது.




அனுப்புதல்













