சர்வதேச நாணய நிதியம் ஜனவரி 23ஆம் நாள் இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் உலகப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 3.5 விழுக்காடாகவும், 4.1 விழுக்காடாகவும் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க இடர்ப்பாடுகளை எதிர்நோக்க உள்ளது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டின் சீனப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 8.3 விழுக்காடு, 8.5 விழுக்காடு உயரும். இந்தியப் பொருளாதார அதிகரிப்பு விகிதம் முறையே 5.9 விழுக்காடு, 6.4 விழுக்காட்டை எட்டும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பீடு செய்துள்ளது.