• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய பசிபிக் அரங்கில் சீனா-அமெரிக்கா இடை சீரான பரிமாற்றம்
  2013-01-25 16:38:39  cri எழுத்தின் அளவு:  A A A   

தொலைநோக்கு மற்றும் பொருளாதார பேச்சுவார்த்தை, ஆசிய பசிபிக் விவாகார கலந்தாய்வு ஆகிய முறைகளிலே, சீனாவும் அமெரிக்காவும் இரு தரப்புப் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து மேற்கொள்ளலாம். இந்நிலையில், ஆசிய பசிபிக் அரங்கில் இரு நாடுகளுக்கிடை சீரான பரிமாற்றங்களை முன்னேற்ற முடியும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் 25ஆம் நாள் தெரிவித்தார்.

அமெரிக்க செனெட் அவை உறுப்பினர் ஜான் ஃபோர்பஸ் கெர்ரி 24ம் நாள் பேசுகையில், சீனாவுடனான உறவை வளர்ப்பது மிகவும் முக்கியமானது. அதேவேளையில், அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சீனா உணர்ந்திருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். மேலும், ஆசிய பசிபிக் பிரதேசத்தில் சீனாவின் இராணுவ ஆற்றல் அதிகரிப்புக்கு அமெரிக்கா எல்லை மீறி தலையிட கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

செனெட் உறுப்பினர் கெர்ரி கூற்றைக் குறித்து, ஹோங் லெய் மேற்கூறிய நிலைப்பாட்டை விளக்கினார். அமெரிக்காவுடன் இணைந்து இரு தரப்பு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக் கட்டுமானத்தைத் தொடர்ந்து தூண்டி, புதிய ரக பெரிய நாட்டுறவை அமைப்பதை ஆய்வு செய்ய சீனா விரும்புவதாக, ஹோங் லெய் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040