மூன்றாவது முறை அணுச் சோதனை மேற்கொள்வதற்காக வட கொரியா அறிவித்துள்ளதற்கு, அமெரிக்க 24-ஆம் நாள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் திட்டம், தேவையில்லாத ஆத்திர மூட்டலாகும். இதனால், வட கொரியா சர்வதேச சமூகத்தில் தனிமைப்படுத்தப்படும். வெள்ளை மாளிக்கையின் செய்தித்தொடர்பாளர் Jay Carney அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
அமெரிக்க இராணுவத் தரப்பு, இந்நிகழ்ச்சியின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்துகின்றது. எந்த ஆத்திரமூட்டலையும் பன்முகங்களிலும் சமாளிக்க அமெரிக்கா தயாராகியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் Leon Panetta உறுதியாகக் கூறினார்.




அனுப்புதல்













