• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெதின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை
  2013-01-28 19:22:58  cri எழுத்தின் அளவு:  A A A   
லாசா நகரத்தின் சுங்கசாவடி வெளியிட்ட தகவலின்படி, 2012ஆம் ஆண்டு திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 342.4 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது, 2011ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 150 விழுக்காடு அதிகமாகும். சீனாவின் பல்வேறு மாநிலங்களின் சராசரி அதிகரிப்பு விகிதத்தை விட அது 146 விழுக்காடு அதிகமாகி, முதலிடம் பெற்றது. 2012ஆம் ஆண்டு திபெதின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை வரலாற்றில் மிக அதிக பதிவாகும்.

இந்தியா, நேபாளம் முதலிய நாடுகளுடன் ஒட்டி அமைந்திருக்கும் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையிலான முக்கிய வணிக வழியாக உள்ளது. சின் காய்-திபெத் இருப்புப் பாதை இயங்க தொடங்கிய பிறகு, திபெதின் இட மேம்பாடு மேலும் தெளிவாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040