• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியப் பிரச்சினையில் சீனா கருத்து
  2013-01-30 17:26:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சிரியாவின் பல்வேறு தரப்புகளும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் எல்லா தீர்வுத் திட்டங்களுக்கும் சீனா ஆக்கமுள்ள திறந்த மனதுடன் ஆதரவு அளிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லேய் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் கூறினார்.

சிரியா பிரச்சினைக்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதி லக்தர் பிராஹிமி 29ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் அறிக்கை ஒன்றை முன்வைத்தார். சிரியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் எதிர்கால வாய்ப்பு நன்றாக இல்லை என்று அவ்வறிக்கை தெரிவித்தது.

இது குறித்து, ஹோங் லேய் கூறுகையில், பன்னாட்டுச் சமூகத்தின் பல்வேறு தரப்புகளும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, சிறப்புப் பிரதிநிதி லக்தர் பிராஹிமியின் பணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென சீனா விரும்புவதாகத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040