2013ஆம் ஆண்டுக்குள் சுமார் 5000 வகை உணவுகளின் வரையறைகள் சீராக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு வரையறை முறைமை அடிப்படையில் உருவாக்கப்படும். 30ஆம் நாள் நடைபெற்ற தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுக் கண்காணிப்புக் கூட்டத்தில் சீன துணை சுகாதார அமைச்சர் சென் சியாவ் ஹோங் இதைச் சுட்டிக்காட்டினார்.
உணவுப் பாதுகாப்பைத் தவிர, 2013ஆம் ஆண்டு குடிநீர் கண்காணிப்பு வலைப்பின்னல் விரிவாக்கப்படும். பள்ளிக்கூடங்களில் குடிநீர் பாதுகாப்பு, காற்று தரக் கண்காணிப்பு முதலியவையும் அடுத்த ஆண்டின் முக்கிய பணிகளாக இருக்கும் என்று சென் சியொ ஹுங் சுட்டிக்காட்டினார்.