கான்சூ மாநிலத்தின் சியா ஹே மாவட்ட நீதிமன்றத்தில் வான்மதாண்சி உள்ளிட்ட 4 பேருக்கு எதிரானக் கொலை குற்ற வழக்கின் தீர்ப்பும், துகாச்சா உள்ளிட்ட இருவருக்கு எதிரான குழப்பம் உருவாக்கிய குற்ற வழக்கின் தீர்ப்பும் 31ஆம் நாள் வெளிப்படையாக வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் 23ஆம் நாள் சியா ஹே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி சாலையில் தீக்குளிக்க முயன்றார். ஆயுதக் காவற்துறையினர் விரைவில் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றினர். ஆனால், வான்மதாண்சி உள்ளிட்ட 6 பேர் மீட்புப் பணியை தடை செய்து ஆயுதக் காவற்துறையினரை தாக்கி சமூக ஒழுங்கிற்கு புறம்பாக நடத்துக்கொண்டனர். தீக்குளித்த விவசாயி உரிய நேரத்தில் சிகிச்சை பெறாமுடியாததால் உயிரிழந்தார்.
நீதி மன்றம் வசாரணை மூலம் இவ்வழக்கின் உண்மையை பொது மக்களுக்கு வெளிப்படுத்தி, மேற்கூறிய 6 பேருக்கு 3 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை தீர்ப்பு அளித்தது.