2013ஆம் ஆண்டு ஜனவரி திங்களுக்கான சீன ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு 50.4விழுக்காடாகும். கடந்த திங்களை விட, அது 0.2விழுக்காடு குறைந்துள்ளது. சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனமும் சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகத்தின் சேவைத் தொழில் கள ஆய்வு மையமும் பிப்ரவரி முதல் நாள் இதைத் தெரிவித்தன. 2013ஆம் ஆண்டு சீனப் பொருளாதாரம் நிலையாக வளரும் என்று ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
நாட்டின் விநியோகம் மற்றும் தேவை உறவின் மேம்பாடு, தொழில்நிறுவனங்களது நம்பிக்கையின் உயர்வு முதலியவற்றை, தொடர்ந்து 4 திங்கள்களாக 50விழுக்காட்டுக்கு மேல் நிலைநிறுத்தியுள்ள இக்குறியீடு வெளிக்காட்டுகிறது.