ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தையை முன்னேற்றுவது, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையை உரிய முறையில் தீர்க்கக்கூடிய ஒரே ஒரு சரியான வழிமுறையாகும். ஈரான், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சீனா விரும்புவதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங் லெய் பிப்ரவரி முதல் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். ஈரான், செறிந்த யுரேனியத் தொழிற்சாலையில் புதிய மைய விலகு விசைப் பொறிகளைப் பொருத்துவது குறித்து அவர் இவ்வாறு கூறினார்.
ஈரான் அணு ஆற்றல் நிறுவனம், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துக்குக் கொடுத்த கடிதத்தின்படி, ஈரான், செறிந்த யுரேனியத் தொழிற்சாலையில் புதிய மைய விலகு விசைப் பொறிகளைப் பொருத்திவுள்ளது. ஆனால், திட்டவட்டமான எண்ணிக்கை தெரியவில்லை. ஈரான் தரப்பைத், தொடர்புடைய தொழில் நுட்பம் முதலிய தகவல்களை வழங்குமாறு சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் கோரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.