சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 20வது கூட்டம் வெள்ளிக்கிழமை முற்பகல் பெய்ஜிங்கில் நிறைவுபெற்றது.
இம்மாநாட்டின் 12வது தேசிய கமிட்டியின் முதல் கூட்டத் தொடர் இவ்வாண்டு மார்ச் 3ஆம் நாள் தொடங்கும். அதில், 12வது தேசிய கமிட்டியின் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், நிரந்தர உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவர் ஜியா ச்சிங் லின் நிறைவுக்கூட்டத்தில் பேசியபோது,
அறிவியல் வளர்ச்சியை முன்னேற்றுவது, சமூகத்தின் இணக்கமான வளர்ச்சியை தூண்டுவது உள்ளிட்ட துறைகளில் கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக முக்கிய பங்களித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.