சீனாவும் ஜப்பானும் முக்கிய அண்டை நாடுகளாகும். இரு நாட்டு உறவுக்குச் சீன அரசு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை மாறாது. தற்போதைய நிலைமையில், சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடை 4 அரசியல் ஆவணங்களின் அடிப்படையில் இரு தரப்புகளும் இன்னல்களைச் சமாளித்து, ஒன்றுக்கு ஒன்று நலன்கள் தரும் நெடுநோக்கு உறவைத் தொடர்ந்து தூண்ட வேண்டும். ஜப்பானிய தரப்பு சீனத் தரப்புடன் சேர்ந்து ஒரே திசையில் செயல்பட்டு, இதற்க்கான நடைமுறை நடவடிக்கைகளை, முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஹொங்லெய் விருப்பம் தெரிவித்தார்.