ஹிலாரி க்ளீண்டன் அம்மையார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து, பிப்ரவரி முதல் நாள் விலகினார். அதேவேளையில், முன்னதாக பரிந்துரை செய்யப்பட்ட ஜான் கெர்ரி இப்பதவியேற்க தொடங்குகிறார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங்லெய் வெள்ளிக்கிழமை இதுப்பற்றி பேசுகையில், அமெரிக்காவுடன் இணைந்து இரு நாட்டு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் மேம்பாட்டிற்கு பாடுபட சீனா விரும்புகிறது என்று கூறினார்.