சீன-அமெரிக்க உறவு நெடுநோக்கு முக்கியத்துவமும், உலக செல்வாக்கும் வாய்ந்தது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று மதிப்பும் நலன்களும் அளித்து, வெற்றி பெறும் கூட்டாளியுறவை நன்றாக வளர்ப்பதற்கு இருதரப்பு நலன்களைச் செவ்வனே கையாள்வது திறவுக்கோலாகும் என்று சீனத் துணை தலைமை அமைச்சர் லீ கெக்சியாங் தெரிவித்தார்.
ஜனவரி 31ம் நாள் பெய்சிங்கில் அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் கீழுள்ள தூதாண்மை விவகார ஆணையத் தலைவர் எட்வர்டு யோய்சியின் தலைமையிலுள்ள பிரதிநிதிக்குழுவினரைச் சந்தித்துரையாடிய போது அவர் இதைத் தெரிவித்தார்.