சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங் கோ, பிப்ரவரி முதல் நாள் மங்கோலியாவில் அதிகாரபூர்வமான பயணம் முடித்து விட்டு, சீனாவுக்கு திரும்பினார்.
மங்கோலிய நாடாளுமன்றத்தின் தலைவர் சான்தாகயூ என்ஹ்போல்டின் அழைப்பை ஏற்று, வூ பாங் கோ ஜனவரி 30ஆம் நாள் உலான்பாடாருக்கு சென்றடைந்து, மங்கோலியாவில் அதிகாரபூர்வமான பயணம் மேற்கொள்ள துவங்கினார். 16 ஆண்டுகளுக்கு பிறகு சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் மங்கோலியாவில் பயணம் மேற்கொண்டது இதுவே முதல் முறை.
ரஷியாவின் விலாடிவாஸ்டோக் நகரில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் நாடாளுமன்ற கருத்தரங்கின் 21வது ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வூ பாங் கோ மங்கோலியாவில் பயணம் மேற்கொண்டார்.