சீனாவின் சந்திரன் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் பிப்ரவரி 3ஆம் நாள், முதல் திங்கள் 23ஆம் நாளாகும். இது சமையலறை கடவுள் திருநாளாகும். சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை அல்லது பனி பெய்து வருகிறது.
பெய்ஜிங்கில் பனி பொழிவு விடியற்காலையில் துவங்கியுள்ளது. சாலை பாதுகாப்புக்கென மஞ்சள் முன்னெச்சரிக்கையை காலநிலை வாரியம் வெளியிட்டது. எதிர்வரும் 3 நாட்களில், சீனாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை மற்றும் பனி பொழிவு தொடர்ந்து, வெப்ப நிலை குறையும். 6 முதல் 9ஆம் நாள் வரை, ஓரளவு கடுமையான குளிர் காற்று சீனாவில் வீசும். இதன் விளைவாக, வட பகுதியிலுள்ள பெரும்பாலான இடங்களின் வெப்ப நிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.