நவீன வேளாண் துறையை விரைவுப்படுத்தி, உயிராற்றலுடைய கிராம வளர்ச்சியை வலுப்படுத்துவது பற்றிய ஆலோசனைகள் என்ற ஆவணம் ஒன்றை, சீன கம்யூனிஸ்ட்சி கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் அண்மையில் வெளியிட்டுள்ளன. புதிய ரக வேளாண் மேலாண்மை முறையை அமைக்க சீனா பாடுபடும் என்று அதில் உறுதி கூறப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சீர்திருத்தத்தின் அளவு, கொள்கை ரீதியான ஆதரவு, அறிவியல் தொழில் நுட்பங்களின் பங்களிப்பு போன்றவை அதிகரிக்கப்பட வேண்டும் என்று இந்த ஆவணம் கோருகிறது.
தவிரவும், உற்பத்திச் செயல்பாடுகளிலுள்ள விவசாயக் குடும்பங்களின் முதன்மை தகுநிலை மதிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.