சீனக் கடல் கண்காணிப்பு 8002 கப்பல் பிப்ரவரி 4ஆம் நாள் முதல் பயன்படுத்தப்படத் துவங்கியது. அது, சீனாவின் ஆயிரம் டன் எடையுடைய 2வது கடல் கண்காணிப்புக் கப்பலாகும். அது, சீனாவின் கடல் அதிகார உத்தரவாதத்துக்கு புதிய செயல்திறனை வலுப்படுத்தும்.
தெற்கு சீனாவின் பூச்சியென் மாநிலத்தின் நிர்வாகத்திலுள்ள கடற்பரப்பில் கண்காணிப்பு, கடற்பரப்பு மற்றும் தீவுகளின் பயன்பாடு, கடல் திட்டப்பணி, கடலுக்குள் கொட்டப்படும் கழிவுகள் முதலியவை, இக்கப்பலின் கண்காணிப்பு கடமைகளில் அடங்கும்.
79.9 மீட்டர் நீளமான 10.6 மீட்டர் அகலமான இக்கப்பல் 5000 கடல் மைல் தூரமும் 30 நாட்களும் தொடர்ந்து இயங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.