தற்போது, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை முக்கிய காலக் கட்டத்தில் இருக்கிறது. தொடர்புடைய தரப்புகள், தூதாண்மை வழிமுறையில் தொடர்ந்து ஊன்றி நின்று, இப்பிரச்சினையைப் பன்முகங்களிலும், உரிய முறையில் தீர்ப்பதற்காக, உரிய காலத்தையும் வாய்ப்பையும் கண்டறிய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் அம்மையார் பிப்ரவரி 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
இது வரை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பொதுத் தேர்தல்களை நடத்தியுள்ளன. ஈரான் இவ்வாண்டின் ஜூன் திங்களில் பொதுத் தேர்தலை நடத்தும். 2013ஆம் ஆண்டு, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினையைத் தீர்க்கும் முக்கிய ஆண்டாகும்.