சீன வெளியுறவு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று, சிரிய வெளியுறவு துறைத் துணை அமைச்சர் ஃபைஸல் மிக்டாட் 4 முதல் 7ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின்போது, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யான் ஜியேச்சி, துணை அமைச்சர் ட்சாய் ஜுன் அடுத்தடுத்து அவரை சந்தித்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்துவர்.
சிரியா பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் வகையில், சீனா மேற்கொள்ளும் ஒரு பகுதி முயற்சியே அதுவாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன் யிங் அம்மையார் 4ஆம் நாள் செய்தியாளர்களிடம் பேசினார்.