சீனா:கட்டும் அணையால் பாதிப்பில்லை
2013-02-04 20:58:50 cri எழுத்தின் அளவு: A A A
சீனா அரசு யாலுசம்பு எனப்படும் பிரம்மபுத்திரா ஆற்றில் அணை கட்டுவதில் உருவாக்குவதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்துகின்றது. எல்லை கடந்துபாயும் ஆற்றின் பயன்பாடு குறித்து சீனா எப்போதும் கவனமான மனப்பாங்கைக் கடைப்பிடித்து வருகிறது. வளர்ச்சியடையும் போது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சீனா எப்போதும் ஊன்றி நிற்கும். இந்த ஆறுபாயும் கீழ்பகுதிக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சீன அரசு முழுமையாக கருத்தில் கொள்ளும். திட்டமிடப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் கீழ்பகுதிக்குச் செல்லும் வெள்ளத்தைத் தடுக்கவோ சுற்றுச்சூழல் பாதுகாப்பைச் சீர்குலைக்கவோ செய்யாது. எல்லை கடந்து பாயும் ஆற்றைப் பயன்படுத்துவதில் சீனாவும் இந்தியாவும் எப்போதும் தொடர்புகொண்டு ஒத்துழைக்கின்றன என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் ஹுவா ச்சுன் யிங் அம்மையார் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்