பெபர்வரி 2-ஆம் நாள் நடைபெற்ற மியுனிச் பாதுகாப்புக் கூட்டத்தில், புதிதாக வளரும் நாடுகளும் முழு உலகின் கட்டுபாடும் என்பது, சிறப்பாக விவாதிக்கப்பட்டது. சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இக்கூடத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சர்வதேசப் பொருளாதார மற்றும் நாணயச் சீர்த்திருத்தங்களைத் தூண்டுவதன் மூலம், வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும், கருத்து வெளிப்பாட்டு உரிமையையும் வலுப்படுத்த வேண்டும். இது, புதிதாக வளரும் நாடுகளும் பிரதேசங்களும், சர்வதேச விவகாரங்களில் மேலும் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க துணைபுரியும். சீனத் துணை வெளியுறவு அமைச்சர் சோன்தோவ் உரைநிகழ்த்திய போது இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் கட்டுக்கோப்பின் ஆக்கப்பணியை வலுப்படுத்த வேண்டும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இக்கூட்டத்தில் கூறினார். மேலும், சர்வதேச விவகாரங்களில், ஜனநாயக அமைப்பு முறையையும் பல தரப்புவாதத்தையும் செயல்படுத்தி, சர்வதேச சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் மேனன் வலியுறுத்தினார்.