இலங்கையின் 65வது தேசிய சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில், அன்று நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள திருகோண மலையில், கொண்டாட்ட விழா நடந்தது. வெளியுலகத்தின் ஐயம் மற்றும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு, போருக்குப் பின்பு, இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை நேரடியாக பார்த்து உணர, இலங்கையில் பயணம் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய நாடுகளின் அலுவலர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு தேசிய இனங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், சமூக அமைப்புகள், அரசுடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ராஜாபாக்ச இலங்கையின் சிறுபான்மை தேசிய இனத்தின் மொழியான தமிழ் மொழியில் பேசி வேண்டுகோள் விடுத்தார்.