சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியேச்சி, பிப்ரவரி 5ஆம் நாளிரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டு பேசியுள்ளனர். கொரிய தீபகற்ப நிலைமை பற்றி, இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
கொரிய தீபகற்ப அணுப் பிரச்சினையை உரிய முறையில் கையாண்டு, இப்பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காப்பது, பல்வேறு தரப்புகளின் நலன்களுக்கு பொருந்தியதாக உள்ளது. அதுவே, அனைத்து தரப்புகளுக்கும் உள்ள பொதுவான கடமை ஆகும் என்று யாங் ஜியேச்சி சுட்டிக்காட்டினார்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா ட்சுன்னிங் அம்மையார் புதன்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் இந்த தகவலைத் தெரிவித்தார்.