இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டில், தென் சீனக் கடற்பரப்பு மீன்பிடி விவகார வாரியம் விரைவான வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் சட்ட அமலாக்கத் திறனும் பெரிதாக வலுவடைந்து வருகிறது. 2014ஆம் ஆண்டுக்குள் தென் சீனக் கடற்பரப்பில் முறையான அரசுரிமை மற்றும் மீன்பிடி பாதுகாப்பை இவ்வாரியம் நனவாக்கும். பல மீனவர்களின் உரிமை நலன்களும் நாட்டின் அரசுரிமையும் மேலும் சீராகப் பாதுகாக்கப்படும் என்று ஊ ச்சுவாங் கூறினார்.