• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கப்பல் கண்காணிப்பு நிகழ்வு பற்றிய உண்மை
  2013-02-08 18:21:36  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன கடற்படை கப்பல், சுடும் கலன்களைக் கட்டுப்படுத்தும் ராடார் மூலமாக ஜப்பானின் கப்பல் மற்றும் விமானம் மீது குறி வைத்ததாக ஜப்பான் அண்மையில் கூறியது. இந்த கூற்றுக் குறித்து, சீனாவின் தொடர்புடைய வாரியம் உண்மையை வெளியிட்டுள்ளது. ஜப்பானின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் 8ஆம் நாள் தெரிவித்தார்.

ஜப்பான் இந்த முறை போலி தகவலை வெளியிட்டது. சீனாவின் புகழுக்கு ஊறு விளைவித்தது. அதன் மூலம் சீனாவின் அச்சுறுத்தலை மிகைப்படுத்தி, பதட்டமான நிலையை ஏற்படுத்தி, சர்வதேச ஊடக கருத்துக்களை தவறான பாதைக்குக் கொண்டு செல்ல ஜப்பான் முயல்கிறது என்று அவர் தெரிவித்தார்.

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சத்தின் செய்தி அலுவலம் 7ஆம் நாள் இந்த நிகழ்வு பற்றி பேசுகையில், ஜப்பான் வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 19 மற்றும் 30ஆம் நாள் கிழக்குக் கடற்பரப்பில் பயிற்சிக் கடமைகளில் ஈடுபட்டபோது, ராடார் அமைப்பை பயன்படுத்தி, ஜப்பானின் ஹெலிகப்டர் ஒன்றையும் இராணுவ கப்பல் ஒன்றையும் பின்தொடர்ந்து கண்காணித்தது. அது, இயல்பான பார்வை மற்றும் எச்சரிக்கை தான். சுடும் கலன்களைக் கட்டுப்படுத்தும் ராடார் பயன்படுத்தப்படவில்லை என்று சீன தேசிய பாதுகாப்பு அமைச்சத்தின் செய்தி அலுவலம் உறுதியாக் கூறியது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040