• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச உறவுக் கோட்பாட்டை அமெரிக்கா மீறி
  2013-02-11 17:13:53  cri எழுத்தின் அளவு:  A A A   
உள்நாட்டின் சட்டப்படி சீனாவின் கூட்டு நிறுவனங்களின் மீது அமெரிக்கா தண்டனை விதிப்பது சர்வதேச உறவுக் கோட்பாட்டைக் கடுமையாக அத்துமீறி, சீனாவின் நலன்களையும் உரிமைகளையும் பாதித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அம்மையார் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு சீனா கடும் மனநிறைவின்மையையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈரான், வட கொரியா, சிரியா ஆகியவற்றுடன் தொடர்பான அணு ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் படி, சீனாவின் தொடர்புடைய கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபரின் மீது தண்டனை விதிப்பதென அண்மையில் அமெரிக்கா அறிவித்துள்ளது. இது குறித்து பேசுகையில், சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்புமுறையை சீனா பேணிக்காத்து, அதற்கு ஏற்ற ஏற்றுமதி மேலாண்மை சட்டங்களையும் நடவடிக்கைகளையும் வகுத்து, அவற்றின் படி சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது என்று ஹு சுன்யிங் அம்மையார் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040