அறிவியல் தொழில் நுட்பத் துறையில் சீனாவிலிருந்து உள்ளூர் புத்தாக்கத்தை வளர்க்கும் நடைமுறைச் செயல்களை, இந்தியா கற்றுக்கொள்ள வேண்டுமென இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆய்வகத்தின் மூத்த ஆய்வாளர் ஸ்மிதா புருஷொத்தம் 15ஆம் நாள் இக்நொமிக் டைம்ஸ் என்னும் செய்தித்தாளில் முன்மொழிவு அளித்தார். தொழில் நுட்பப் புத்தாக்கம், ராணுவத்தில் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, கல்விச் சீர்திருத்தம் ஆகியவற்றில், சீனா மேற்கொண்ட வெற்றிகரமான நடவடிக்கைகளை அவர் மேலும் விவரித்தார்.
தற்போது தொழில் நுட்பத் துறையில், உலகில் பல்வேறு நாடுகளும் போட்டியிடுகின்றன. இத்துறையில் இந்தியா பிற நாடுகளை மேலும் சார்ந்திருக்கிறது. இருப்பினும் சீனா மாபெரும் முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. அதனால் இந்தியா சீனாவிலிருந்து கற்றுக்கொள்வது உறுதி என்று அவர் குறிப்பிட்டார்.