• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
:சீன-இந்திய செய்தி ஊடகங்களின் நட்பார்ந்த ஒத்துழைப்பு ஆ
  2009-11-23 15:23:36  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் பெய்ஜிங்கில் சிந்தனை கிடங்கு அமைப்பின் மாநாடு நடைபெற்ற போது இந்திய செய்தி ஊடகங்களின் பொறுப்பாளர்கள் இடம் பெற்ற பிரதிநிதிக் குழு கலந்து கொண்டது. பின்னர் அக்குழு சீன வானொலி நிலையத்தை பார்வையிட்டது. "இந்தியாடுடே" எனும் வார இதழின் நிர்வாக தலைமை பதிப்பாசிரியர் திரு ராஜ் சங்கப்பா, புதுதில்லியில் தலைமையகத்தை கொண்டுள்ள சக்கால் எனும் மராத்திய மொழி செய்தியேட்டின் செய்தியாளர் திரு விஜியா புருசொட்டன் நைக், இந்தியாவில் மிக பெரிய செய்தி நிறுவனமான பிரஸ்ட்செஸ்ட் அப் இந்தியாவின் மூத்த அரசியல் பதிப்பாசிரியர் திரு எஸ் காத்தாட்டி, இந்திய சிந்தனை கிடங்கு அமைப்பின் கொள்கை தேர்வு மையத்தை சேர்ந்த சீன பிரச்சினைகளின் ஆய்வாளர் திரு ஜொராவார் தோலட் சிங் ஆகியோர் இந்த பிரதிநிதிக் குழுவின் உறுப்பினராவர். அவர்கள் சீன வானொலியை பார்வையிட்டனர். சீன வானொலி துணை இயக்குனர் லீச்சுன்சான் அவர்களை சந்தித்து உரையாடினார். இன்றைய கேள்வியும் பதிலும் நிகழச்சியில் இந்த சந்திப்பின் மூன்றாவது பகுதியை வழங்குகின்றோம். தொகுத்து வழங்குபவர் தி. கலையரசி.

பிரஸ்ட்செஸ்ட் அப் இந்தியாவின் மூத்த அரசியல் பதிப்பாசிரியர் திரு எஸ் காத்தாட்டி வானொலி நடத்தும் போது எப்படி நாட்டின் ஆதரவு பெறுவது என்பது பற்றி வினா எழுப்பினார்.

இது பற்றி துணை இயக்குநர் சீச்சுன்சான் விடை அளிக்கிறார். அவர் கூறியதாவது.

சீன வானொலி நிலையம் அரசு நிலை வானொலி நிலையமாகும். ஆகவே அதற்கு தேவையான நிதி ஆதரவை அரசிடமிருந்து பெறுகின்றது. இது பிபிசி மற்றும் விஓஏ போல இருக்கின்றது. தவிரவும் வானொலியின் தலைமையின் கீழுள்ள "உலக செய்தி" எனும் செய்தியேடு வெளியீட்டகங்கள் சந்தையின் வளர்ச்சிக்கேற்ப அலுவல் நடத்துகின்றன. இரண்டு வெளியீட்டகங்கள் சீர்திருத்தப்பட்ட பின் இவ்வாண்டின் இறுதியில் முழுமையாக தானே தொழில் நடத்தி லாபம் பெறும் என்று துணை இயக்குநர் சீச்சுன்சான் விவரித்தார்.

இந்திய சிந்தனை கிடங்கு அமைப்பின் கொள்கை தேர்வு மையத்தை சேர்ந்த சீன பிரச்சினைகளின் ஆய்வாளர் திரு ஜொராவார் தோலட் சிங் சீன பண்பாடு பற்றி சீன வானொலி எந்த அளவில் பரப்புரை செய்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் அதன் செல்வாக்கு எப்படி என்று வினவினார்

இது பற்றி சீச்சுன்சான் கூறியதாவது.

எங்கள் கடமைகளில் ஒன்று சீனாவில் நிகழ்ந்தவற்றை நடைமுறையாகவும் உண்மையாகவும் பல்வேறு நாடுகளின் மக்களுக்கு அறிமுகப்படுவதாகும். ஹான் மொழி தவிர 59 அந்நிய மொழிகள் எங்களுக்கு உண்டு. ஆகவே இவற்றின் மூலம் நாள்தோறும் சீனாவில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிவிப்பதன் மூலம் உலக மக்கள் அனைவரும் எளிதான முறையில் சீனாவை அறிந்து கொள்கின்றனர். ஏனென்றால் பல்வேறு இன மக்களுக்கிடையிலான பரிமாற்றமும் தொடர்பும் மிகவும் முக்கியமானவை. இந்திய மக்களும் சீன மக்களும் அயராமல் உழைக்கும் மக்களாவர். உலகில் நிகழ்ந்தவற்றை உண்மையாக அறிந்து கொள்வதற்கு துணைபுரிவது எங்கள் பணியின் முக்கிய பகுதியாகும். அதேவேளையில் எங்கள் வானொலி மூலம் உலகின் உண்மையை அறிய சீன மக்களுக்கு உதவுகின்றோம். எங்கள் செய்தியேடான உலக செய்திகள் என்பதின் கடமை இதுதான். எங்கள் வானொலி ஒலிபரப்பிய செய்திகளில் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவது கண்டறியப்பட முடியாது என்பதை நான் உறுதிப்படுத்துகின்றேன். ஜுன் திங்கள் நான் ஆப்பிரிக்க நாடுகளில் பணிப் பயணம் மேற்கொண்ட போது அங்கே மக்கள் எனக்கு வரவேற்பு அளித்தனர். அதேவேளையில் சில நாடுகளை நாங்கள் வரவேற்க வில்லை. ஏனென்றால் அவை எங்கள் நாட்டை கவிழ்க்க முயல்கின்றன என்று ஆப்பிரிக்க நண்பர்கள் கூறியதாக சீச்சுன்சான் விவரித்தார்.

நீங்கள் எப்படி திபெத் தைவான் பற்றி அறிவிக்கிறீர்கள் என்று திரு நைக் கேட்டார்

இது பற்றி சீச்சுன்சான் கூறியதாவது.

இது மிக பெரிய கேள்வி. இதுவும் எங்கள் அரசின் மைய நலனுடன் தொடர்புடையது. திபெத்தோ தைவானோ எங்கள் நாட்டிலிருந்து பிரிக்கப்பட முடியாத பகுதிகளாகும். யாவராலும் இதை ஊடுருவ முடியாது. தைவான் இப்போது இன்னும் பிரிவு நிலையில்இருக்கின்ற போதிலும், தைவான் உடன்பிறப்புகள் ஓர் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர். அது நாம் ஒரே இனத்தை சேர்ந்தவர் என்பதாகும். ரத்தமும் தசையும் பிரிக்கப்பட முடியாத உறவு என்ற பழைய மொழி அனைவரும் அறிந்ததே. திபெத் பிரச்சினை பற்றி குறிப்பிட்டால் திபெத் இனம் சீனாவின் 56 தேசிய இனங்களில் ஒன்றாகும். இந்திய-சீன எல்லை பிரச்சினை கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படலாம். ஏனென்றால் சீனா மற்றும் இந்தியா அமைதியை விரும்பும் நாடுகளாகும் என்று அவர் கூறினார்.

இப்போது சீனா எதிர்நோக்குகின்ற பெரிய அச்சுறுத்தல் அல்லது கவலை என்ன என்று திரு ராஜ் சங்கப்பா வினாவிக்கிறார்.

இது பற்றி சீச்சுன்சான் கூறியதாவது.

நாங்கள் இப்போது எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல் உலக மக்கள் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல் போல் இருக்கின்றது. எடுதத்துக்காச்டாக இதில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்றது. சின்ச்சியாங் நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாகும். ஓராண்டுக்கு முன் திபெத்தில் நிகழ்ந்த வன்முறை கலகம் இன்னொரு எடுத்துக்காட்டாகும். ஆகவே நாம் கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும். நாம் இன்னும் பல பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு, விவசாயிகள் பிரச்சினை, மலைப் பிரதேசங்களில் நிலவிவரும் வறுமை, வளர்ச்சியடையாத இடங்களில் நீர் பற்றாக்குறை மின்சார பயன்பாடு போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன. வெளிநாட்டு ஏற்றுமதி தொழில் மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. இவையனைத்தும் எங்கள் வளர்ச்சியை பாதித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றை எதிர்நோக்குகின்ற தருணத்தில் இந்திய செய்தி ஊடகங்களும் சீன செய்தி ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு மூலம் அருமையான எதிர்காலத்தை உருவாக்க பாடுபட வேண்டும் என்று சீன வானொலி துணை இயக்குநர் சீச்சுன்சான் சந்திப்பின் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போது இறுதியில் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040