அக்டோபர் 29.10.2009 அன்றைய அறிவியல் உலகம் பகுதியில் வறட்சியைத் தாங்கும் பயிர்கள் என்ற தலைப்பிலான கட்டுரையின் தலைப்பை கேட்டதுமே எங்க ஊர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் எங்கள் மாவட்டமே வறட்சி என்று அழைக்கப்படும் தருணத்தில் வறட்சியைத் தாங்கும் பயிர்கள் விளைச்சலில் நல்ல முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சியை தருகின்றது. புதிய வகை விதைகளை கண்டுபிடித்து அறிவியலின் முன்னேற்றத்தை உயர்த்தி இருப்பது அறிவியலுக்கு நாம் செலுத்தும் நன்றி காணிக்கை ஆகும். இதற்கு முக்கிய காரணமாக அமில சுரபியை செலுத்தி மாற்றத்தை உண்டுபண்ணுவது வெற்றியைக் காட்டும். இந்த வகை சுரபியை 1960 ஆம் ஆண்டு கண்டுபிடித்த தகவலையும் கேட்டு பயன்பெற்றோம். தற்போது கூட தமிழ்நாட்டில் கத்திரிக்காய், நெல்லில் கூட புதிய ரக வகைகளை கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ள செய்தியும் பாராட்டத்தக்கதாகும்.
30.10.2009 அன்றைய நிகழ்ச்சயில் சீனாவின் வடகிழக்கில் உள்ள இயற்கை புகலிடம் பற்றிய சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியை செவிமடுத்தோம். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு கூட தெரியாத புதுமை செயல்கள் ஐந்தறிவு படைத்த பறவைகளுக்கு இருப்பது ஆச்சர்யத்தையும் வியப்பையும் அளிக்கிறது. ஆகையால்தான் இன்றைக்கும் நாயை நன்றியுள்ள விலங்காகவும், வீட்டில் பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ் ஆகியவைகளை வளர்த்து வருகின்றோம். நிகழ்ச்சியில் கூட பறவைகள் மனித குலத்தின் நண்பர்கள் என்று சொன்னது புதிய சிந்தனையை தெரிந்து கொண்ட திருப்தி அடைந்தோம். மனிதர்களுக்கு உதவி செய்தாலும் மனித நேயம்தான், அதே நேரத்தில் பறவைகளுக்கு முதலுதவி செய்தாலும் மனித நேயம்தான் என்பதை ஆயிரத்திற்கு மேற்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளித்து இருப்பது மனமகிழ்ச்சி அடைந்ததோடு மனதிருப்தி அடைந்தோம். இயற்கை புகலிடம் என்பதை விட மனித நேய மகிழ்விடம் என்பதே பொருந்தும்.
25.10.2009 ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பான மலர்ச்சோலையில் மலர்ந்த அறுசுவை தகவல்களும் தெரியாதவற்றை தெரிந்துக்கொள்ளும் வகையில் அமைந்து இருந்தது. கலைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறது சீனா என்பது ஷாங்காய் சர்வதேச கலைவிழா ஓர் எடுத்துக்காட்டாகும். அதைப் போன்று பெண்கள் நாட்டின் கண்கள் என்பதைப் போன்று பெண்கள் அறிவியல் துறையில் சிறந்து விளங்கோருக்கு மேதைகள் எனும் சிறப்பு தகுதி செய்தி உலக மகளிருக்கு எல்லாம் மகுடம் சூட்டியது. 70, 75 கிலோ எடையை சமாளிக்க முடியாத நமது உடல் பிரிட்டனில் 572 கிலோ மாமிச மலை மனிதனை நினைத்து மயக்கம் வந்துவிட்டது. புதிய சௌலி கோயில் படத்தில் ஜாக்கிசான் நடிக்கிறார் என்ற புதிய தகவலையும் கேட்டு அறிந்து கொண்டோம். மலர்ச்சோலை மயக்கத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது.
27.10.2009 அன்றைய சீனக் கதையில் தலை சம்பந்தமான இருவித கதைகள் ஒரே உபதேசத்தை கூறியது சிறப்பை தந்தது. உலகில் சில மனிதர்கள் சொல்வதை செய்வதில்லை, ஆனால் ஆட்சியாளன் சாவ் சாவ் அவர்கள் படைவீரர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை தானே தவறு செய்தும் அந்த தண்டனையை அவனே முன்னின்று ஏற்றுக் கொண்டது அவனது நீதியையும் நேர்மையையும் காட்டியது. அடுத்து வந்த தலையைக் கடன் கொடு என்ற தலைப்பிலான கதையில் தவறு செய்தால் தண்டனைகள் வழங்குவது நிலையான ஒன்று, ஆனால் உயிரையே தருவது போர் மற்றும் அரசியல் தந்திரம் என்பது உண்மையை கூறியது. சில நேரங்களில் தவறான செயலை செய்தால்தான் வெற்றியும் உறுதி என்பதை கதை எடுத்துக் காட்டியது.
31.10.2009 அன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் அகில இந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் வளவனுர் புதுப்பாளையம் அய்யா எஸ்.செல்வம் அவர்கள சீன திருமண பண்பாடு என்ற கேள்விக்கான பதிலை சீன திருமண பண்பாடு என்ற கேள்விக்கான பதிலை சீன வானொலி தமிழ்ப்பிரிவு தலைவி அம்மா கலையரசி அவர்கள் தெளிவான விளக்கத்தை கூறி விளக்கமளித்தார். தமிழ்நாட்டிற்கும் சீனாவிற்கு 50 சதவீதம் அதே பண்பாடு நிலவுகிறது. ஆனால் 50 சதவீதம் அதே பண்பாடு நிலவுகிறது. ஆனால் 50 சதவீதம் பண்பாடு மாற்றம் நிகழ்கிறது. மேலும் சீனாவில் திருமண சட்டம் 1950ம் ஆண்டு முதலாவதாகவும், 2001 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் திருத்தப்பட்ட செய்தியும், திருமண நாளை இரட்டை எண்களை தேர்வு செய்வது விந்தையாக உள்ளது. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி முன்பை விட தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது மன மகிழ்ச்சியை தருகின்றது.
28.10.2009 அன்றைய நவசீனாவின் வைரவிழா என்னும் தலைப்பிலான கட்டுரையில் சீன மனித வள துறையின் வளர்ச்சி பற்றி கருத்து தெரிவிக்கையில் உலகில் பிறந்த அனைவரும் திருப்திகரமான வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வளர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாடும் முயற்சி செய்து பல்வேறு செயல்பாடுகளையும், பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகின்றது. ஆகையால்தான் தமிழ்நாட்டில் மாநில திட்டத்தில் கல்வித்துறை என்றும் மத்திய திட்டத்தில் மனித குலம் மேம்பட்டு சிறந்து விளங்க வேண்டும் என்ற அடிப்படையில் மனித வள மேம்பாட்டுத் துறை என்று ஒதுக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன. அதைப் போன்று திறமைசாலிகளை கண்டு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சீனா முயற்சித்து வருவது பாராட்ட வேண்டிய செயலாகும். வளர்ந்து வரும் நாடுகளில் மனித வளத் துறை வளர்ச்சி பெற்று வருவது திண்ணமே.