நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எனது பேட்டியை தொடர்ந்து கேட்டு வந்தேன். எனது பேட்டியை சிறப்பாக அமைய காரணமாக இருந்த திரு.கிளிட்டஸ் அவர்களுக்கு எனது நன்றிகள். நிகழ்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைய வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். 19.10.2009 அன்று மக்கள் சீனம் நிகழ்ச்சி கேட்க முடியாமல் போயிற்று. காரணம் ஒலிபரப்பு தெளிவு இல்லை. ஒரே இரைச்சலாக இருந்தது. நன்றி.
20.10.2009 அன்று நவசீன வைரவிழா பற்றிய சிறப்புக் கட்டுரை கேட்டேன். அதில் அனைத்து நாடுகளுடன் சீனா கொண்டுள்ள துாதாண்மை உறவு பற்றி கூறப்பட்டது. இந்தியாவுடன் துாதாண்மை உறவு தற்போது எவ்வாறு, எந்த நிலையில் இருந்து வருகிறது என்பதை முதலில் சீனா அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இரு நாட்டிற்கும் இடையே உள்ள எல்லை பிரச்னையை சீனா நன்கு புரிந்து கொள்ள வேண்டும். புதிதாக ஏதாவது பிரச்சினை வராமல் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம். இரு நாட்டிற்கும் இடையே உள்ள உறவு நல்ல முறையில் இருக்க வேண்டும். உறவுகளை மேம்படுத்த சீனா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நன்றி.
。。。。。。தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன்。。。。。。
தென்பொன்முடி. தெ.நா.மணிகண்டன். 7.11.09 அன்று இசைநிகழ்ச்சியில் சீன நாட்டின் பனிகால பாடல்கள் ஒலிபரப்பு ஆக கேட்டேன்.சீன நாட்டின் பனி பொழிவை கொண்டாடும் வகையில் பாடபட்ட பாடல்கள் தமிழகத்தில் மழைகாலத்தை வரவேற்று பாடபடுவது போன்ற உனர்வை ஏர்படுத்தியது.
தென்பொன்முடி.தெ.நா.மணிகண்டன்.7.11.09 அன்று கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் திரு கலையரசியும் சிருநாயக்கன்பட்டி வேலுச்சாமியும் சீன செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாடுகள்,வளர்ச்சிகள், எதிர்கல திட்டங்கள் பற்றி கலந்துரையாடல் நடத்த கேட்டேன்.1904 ஆம் ஆண்டு துவங்கி பேரிடர் காலங்கலில் விரைந்தோடி உதவி பனிகள் செய்து மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள (சீன செஞ்சிலுவை சங்கத்தின்) உள்நாடு,அயல்நாடுகளில் ஆற்றிவரும், வந்த பனிகளின் மதிப்பை என்னும் போது மலைப்பாக உள்ளது.இப்படிபட்ட தன்னலமற்ற பொது நல நோக்குடன் செயல்பட்டு வரும் சீன செஞ்சிலுவை சங்கம் பற்றி அறிய தந்த சீன வானொலிக்கு நன்றி..