செல்வம்..........கலையரசி அவர்களே, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனாவில் திருமணங்கள் தொடர்பான பண்பாடு பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.
கலை......நீங்கள் இது பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்க தயாராக இருகின்றேன்.
செல்வம்..........மகிழ்ச்சி. முதலில் சீனாவில் திருமணம் தொடர்பான சட்டம் உண்டா?
கலை.........கண்டிப்பாக உண்டு. 1950ம் ஆண்டில் சீனாவில் திருமணம் தொடர்பான முதலாவது சட்டம் வெளியிடப்பட்டது.
செல்வம்..........இந்த சட்டத்தில் என்னென்ன விதிகள் ிடம் பெறுகின்றன?
கலை........முதலில் ஒருவருக்கு ஒருத்தி அதாவது ஒரு கணவர் ஒரு மனைவி என்பது குடும்பம் என்ற கோட்பாடு விதிக்கப்படுகின்றது. ஆண்களும் பெண்களும் சமநிலையில் உரிமைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். மகளிர் மற்றும் குழந்தைகளின் சட்டரீதியான உரிமை நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்படுகின்றது.
செல்வம்........பெற்றோர் அறிமுகப்படுத்தி உறுதிப்படுத்தும் திருமண வழிமுறை இப்போது சீனாவில் பரவியுள்ளதா?
கலை........கோட்பாட்டு ரீதியில் பார்த்தால் இது போன்ற திருமண அறிமுக வழிமுறை அதிகமில்லை. ஆனால் விறுவிறுப்பான இன்றைய உலகில் திருமண வயதாகிய பெண்களும் ஆண்களும் அலுவலில் ஈடுபடும் போது திருமணம் செய்வது பற்றிய அவர்களின் ஆர்வம் குறைவாக இருக்கும் போது அவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கென அவர்களது கல்விப் பின்னணி, வேலை மற்றும் வாழ்க்கை பின்னணி தகவல்களை எடுத்துச் சென்று பூங்காவில் தங்களை போன்ற பெற்றோரை சந்தித்து பேசி மாப்பிள்ளை அல்லது மண மகளை தேர்வு செய்வது சீனாவில் மிகவும் பரவலான ஒரு நாகரீக வழிமுறையாகியுள்ளது.
செல்வம்........கேட்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கின்றது. இந்த வழிமுறையில் மணமக்கள் உருவாகும் வாய்ப்பு உண்டா?
கலை........உண்டு. இது தவிர இணையத் தகவல் மூலம் இளைஞர்கள் அவர்தம் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் வழக்கம் நிலவுகின்றது.
செல்வம்..........முடியுமா?
கலை...........முடியும். இணையத் தகவல் கண்டு அறிமுகப்படுத்திய தம்பதிகள் இன்பமாக வாழ்ந்து வருகின்ற உண்மை மிக அதிகம்.
செல்வம்.........சம நிலையில் மண மக்களை தேர்வு செய்யும் அதேவேளையில் தம்பதிகளுக்கிடையில் குடும்ப உணர்வு உடைந்த பின் இமக்கம் செய்தாலும் பயன் இன்னும் காணப்பட்ட வில்லை. இந்தச் சூழ்நிலையில் மக்கள் அவர்களது திருமண வாழ்க்கையை எப்படி கையாளுவர்?
கலை........சீனாவின் திருமணச் சட்டத்தில் இது பற்றி தெளிவாக விதிக்கப்படுகின்றது. அதாவது தம்பதிகளிடையில் அன்புணர்வு உண்மையாக உடைந்ததால் அவர்கள் மண முறிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். சட்டத்தின் மூலம் குடி மக்கள் அனுபவிக்கும் மண முறிவுச் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்படுகின்றது.
செல்வம்........அப்படியிருந்தால் கட்டற்ற முறையிலான விவாக ரத்து விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டா?
கலை........இல்லை. நீங்கள் பாருங்கள். மண மக்கள் ஒருவரின் மீது ஒருவர் அன்பும் தாகலும் கொண்டு உண்மையில் இருவரும் தங்கள் காதலை உறுதிப்படுத்திய பின் திருமணம் செய்வர். ஆகவே வாழ்க்கையில் சிந்திக்காமல் செயலில் இறங்கி பின்பு துன்பப்படுவது திருமண வாழ்க்கையில் மிகமிகக் குறைவு.
.....................இசை.................
செல்வம்.......1950ம் ஆண்டில் வகுக்கப்பட்ட திருமணச் சட்டம் திருத்தப்பட்டதா?
கலை...........இச்சட்டம் 2001ம் ஆண்டில் திருத்தப்பட்டது. இதில் குடும்ப வன்முறைச் செயல்கள் தெளிவாக தடுக்கப்படுகின்றன. குடும்பத்தினரிடையில் துன்புறுத்தல் கொடுமை செய்தல் போன்றவை தடுக்கப்படுகின்றன.
செல்வம்........திருத்தப்பட்ட திருமணச் சட்டத்தில் குடும்ப வன்முறைச் செயல்கள் தடுக்கப்படுவது சமூகத்தின் முன்னேற்றத்தையும் பெண்களின் கன்னம்பிக்கையின் வலிமையையும் கோடிட்டுக்காட்டுகின்றது. உரிமைகளை விட்டுக்கொடுக்காத எண்ணமும் அதிகரிக்கத் துவங்கியது. அல்லவா?
கலை.........ஆமாம்.
செல்வம்........தத்துவ ரீதியில் திருமணச் சட்டம் பற்றிய தகவல்கள் பற்றி விவாதித்தோம்.
கலை.........ஆமாம். அடுத்து வாழ்க்கையுடன் தொடர்புடைய திருமணம் பற்றிய பழக்கவழக்கங்கள் பற்றி எதாவது அறிந்து கொள்ள வேண்டும்?
செல்வம்........கண்டிப்பாக. இந்தியாவில் குறைந்தபட்டசம் 20 வயதுடைய ஆணும் 18 வயதான பெண்ணும் திருமணம் செய்யலாம். சீனாவில் பொதுவாக மண மக்கள் திருமணம் செய்யும் வயது என்ன?
கலை.........சீனாவின் திருமணச் சட்டம் விதித்த வயது ஆணுக்கு 22. பெண்ணுக்கு 20. அவர்கள் இந்த வயதுக்கு பின் திருமணம் செய்யலாம். பொதுவாக இரண்டு ஆண்டுகள் தள்ளி திருமணம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் முன்னேறிய சமூக வாழ்க்கை வாழ இளைஞர்கள் பொதுவாக 25 முதல் 35 வயது வரையான காலத்தில் திருமணம் செய்வதை கருத்தில் கொள்கின்றனர்.
செல்வம்.......திருமண வயத்தை கடந்து திருமணம் செய்தால் அரசு மண மக்களுக்கு ஏதாவது ஊக்கம் அளிக்குமா?
கலை.........நீங்கள் கேட்டது நல்ல கேள்வி. பொதுவாக திருமணம் செய்யும் போது அதற்கான விடுமுறை நாட்கள் 3 நாட்களாகும். ஆனால் தாமதமாக திருமணம் செய்தால் மண மக்களுக்கு 10 விடுமுறை நாட்கள் வழங்கப்படும். அவர்கள் பணிபுரியும் வாரியம் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தனித்தனியாக 500 யுவான் ஊக்கபரிசு வழங்கும்.
செல்வம்..........மகிழ்ச்சியான தகவல். சீனாவில் பொதுவாக மண மக்கள் எந்த நாளில் திருமணம் செய்வர்?
கலை.........சீனாவின் வசந்த நாட்காட்டியின் படி இரட்டை எண் கொண்ட அதாவது 2, 6, 10 போன்ற இரட்டைய எண் நாட்களை மண மக்கள் தாம் ஒன்றிணையும் நாளாக தேர்வு செய்வர். வேறு ஊரில் வேலை செய்பவர்கள் திருமண நாளை தேர்வு செய்யும் போது வசந்த விழா, தேசிய விழா போன்ற கொண்டாட்ட நாட்களை திருமண நாளாக தேர்வு செய்வர்.
செல்வம்........திருமண நாளை பற்றி அறிந்து கொண்டேன். சரி பொதுவாக திருமணம் செய்வதற்கு மணமக்கள் எவ்வளவு செலவு செய்கின்றனர்?
கலை.........இது மக்கள் பொதுவாக அக்கறை செலுத்துகின்ற விடயமாகும். முன்பு எங்கள் திருமண அனுபவத்தை பார்த்தால் 6 போர்வைகள், நான்கு நாற்காலிகள், ஒரு மேசை, ஒரு பீரோ போன்ற வீட்டுப் பயன்பாட்டு வசதிகள் இருக்கும் போது திருமணம் செய்யப்பட்டது. இப்போது ஆடம்பர வாழ்க்கையை மக்கள் பொதுவாக விரும்புகிறனர்.
செல்வம்..........இது பற்றி விபரமாக கூறுங்கள்.
கலை..........மகிழ்ச்சி. இப்போது திருமணம் செய்ய வேண்டுமாயின் முதலில் வாடகை வீடு அல்லது சொந்த வீடு இருக்க வேண்டும். வாடகை வீடு இருந்தால் திங்களுக்கு குறைந்தது 1000 யுவான் வாடகைக்கு செலுத்தப்பட வேண்டும். தொலைக் காட்சிப் பெட்டி, சலிவை இயந்திரம், குளிர் சாதனப் பெட்டி, காற்றுப் பதனி, ஆகியவை வீட்டில் பொருத்தப்பட வேண்டும். பொருளாதார வசதியிருந்தால் சீருந்து வாங்கப்பட வேண்டும். இது இப்போது பரவாயில்லை. ஆகவே ஒரு புதிய குடும்பம் உருவாக அடிப்படையில் ஒரு லட்சம் யுவான் தேவை.
செல்வம்..........புதிய வீடு வாங்கினால் எப்படி?
கலை.........மண மக்கள் பொதுவாக வங்கியிலிருந்து கடன் வாங்கி புதிய வீட்டை வாங்குவர். புதிய வீடு வாங்குவதற்கு தேவையான முதல் தொகுதி பணத் தொகை மணமக்களின் பெற்றோர்களால் வழங்கப்படுவதுண்டு. பின் கடன் தொகை மண மக்களால் செலுத்தப்படும்.
செல்வம்........திருமண விழா எப்படி நடைபெறுகின்றது?
கலை........தென் சீனா வட சீனா ஆகியவற்றில் வேறுப்பட்ட வழிமுறைகள் உள்ளன. பெய்சிங்கில் பொதுவாக நண்பகல் வேளை திருமணம் செய்யும் நேரம். மண மக்கள் காலை 10 மணிக்கு சீருந்து மூலம் ஹோட்டலுக்கு வந்துசேர திருமண விழா நடைபெறும். வாழ்த்து தெரிவிக்கும் மக்கள் மண மக்கள் வருவதற்கு முன் ஹோட்டலுக்கு வந்து அ்பளிப்பு அல்லது வாழ்த்துப் பணம் கொண்ட அவருடைய பெயர் எழுதப்பட்ட உறையை திருமண நிர்வாகப் பணியாளர்களிடம் வழங்குவர்.
செல்வம்........திருமண வாழ்த்து தெரிவிக்கும் போது பொதுவாக எவ்வளவு பணத்தை வழங்குவர்?
கலை.........அது சொந்த விருப்பத்தின் படி வழங்கப்படலாம். பொதுவாக திருமண விருந்தில் கலந்து கொள்வோர் தனித்தனியாக 500 முதல் 1000 யுவான் வரை வழங்குவர்.
செல்வம்........மண மக்கள் திருமணம் செய்த பின் உல்லாசப் பயணம் செய்வதுண்டா?
கலை........இப்போது இது பரவலாகியுள்ள வழிமுறை. பெய்சிங் ஷாங்காய் ஹைநான், குவான்சோ போன்ற புகழ்பெற்ற தொழிற்துறை வளர்ச்சியடைந்த மாநகரங்களில் கடலோர நகரங்களில் உல்லாசமாக சுற்றுலா செய்வது மக்கள் பொதுவாக தேர்வு செய்யும் இடங்களாகும்.
செல்வம்..........இன்று சீனாவின் திருமணப் பண்பாடு பற்றி விவாதித்ததன் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். இனிமேல் இதை போன்ற தகவல்களை அதிகமாக அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
கலை........கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கு எடுப்பதற்கு மிக்க நன்றி.
செல்வம்.......இந்த வாய்ப்புக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவிக்கின்றேன்.
கலை...........நேயர்களே சீனாவின் திருமணப் பண்பாடு பற்றி கேட்டீர்கள். இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
செல்வம்..........வணக்கம் நேயர்களே.