• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனரின் நண்பரான மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ்
  2009-12-01 11:44:16  cri எழுத்தின் அளவு:  A A A   

இன்றைய நிகழ்ச்சி முதல் சீனர்களின் சர்வதேச நண்பர்களது வாழ்க்கை மற்றும் கதைகள் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்படும். நாம் முதலில் அறிமுகப்படுத்தும் நபர் மறைந்த இந்திய மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் என்பவராவார். கடந்த 1938-45ம் ஆண்டுகளில் சீனாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது சீன மக்களுக்கு உதவும் வகையில் இளம் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் பிறந்த ஊரான இந்தியாவை விட்டு சீனாவுக்கு வந்து அவருடைய சிறந்த மருத்துவ சிகிச்சை நுட்பத்தின் மூலம் சீன மக்களுக்கு உதவி வழங்கினார். மிகப் பல சீனர்கள் அவரை நன்றாக அறிந்து கொண்டுள்ளனர். அவருடைய அணுகுமுறை பண்பு நலன் சிகிச்சையளிப்புத் திறன் ஆகியவை சீன மக்களின் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டன. அவரின் உடன்பிறப்புகள் சீனாவிலான அவரது போராட்ட வாழ்க்கைக் கதைகள் பற்றி எப்படி மதிப்பிடுவதை தெரிந்து கொள்வோமா?

மும்பை நகரின் தெற்கில் அமைந்த சாதாரண ஒரு மாடி வீட்டில் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸின் மூன்றாவது தங்கை மனோரமா கோட்னிஸ், ஐந்தாவது தங்கை வத்சலா கோட்னிஸ் இருவரும் வாழ்கின்றனர். அவர்கள் இப்போது மூதாட்டிகள். அப்போது அவர்களது சகோதரர் ஷந்தாராம் Kotnis இந்தியாவை விட்டு சீனாவுக்கு சென்ற போது அவர்கள் குழந்தையாக இருந்தனர். அண்ணன் சீன மக்களின் பத்து முக்கிய சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை கேட்டறிந்த போது அவர்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியடைகின்றனர். 80 வயதுக்கு மேற்பட்ட மனோரமா கூறியதாவது.

சீன மக்கள் என் அண்ணன் மருத்துவர் ஷந்தாராம் Kotnis அவர்களை பத்து முக்கிய சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேந்தெடுத்தமை எங்களுக்கு பெருமையாகும். அவர் ஊரை விட்டுப் புறப்பட்ட போது எனக்கு 16 வயது தான். சீனாவில் நடைபெற்ற ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் சீன மக்களுக்கு அண்ணன் உதவி செய்தார். குடும்பத்தினர் அவரின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டனர் என்று அவர் கூறினார்.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040