• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் குறிப்பிட்ட அளவிலான கிராமப்புற வாழ்க்கை வசதி
  2009-12-04 10:32:01  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை.......வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

ரவிச்சந்திரன்......நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி.

கலை.......நேயர் நண்பர்களே. இன்றைய நிகழ்ச்சிக்கு தி. கலையரசியும் சேந்தமங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரனும் சீனாவில் குறிப்பிட்ட அளவிலான கிராமப்புற வாழ்க்கை வசதி பற்றி கூறுகின்றோம்.

ரவிச்சந்திரன்......இது நல்ல தலைப்பு. என்னை போன்ற தமிழ் நேயர் நண்பர்கள் சீன கிராமவாசிகளின் வாழ்க்கையை அறிந்து கொள்ள மிகவும் ஆர்வம் கொண்டுள்ளர்.

கலை.......மகிழ்ச்சி. அப்படியிருந்தால் முதலில் சீனாவின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கான ஐந்தாண்டு திட்டம் பற்றி விவாதிக்கலாம்.

ரவிச்சந்திரன்......இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐந்தாண்டு திட்டம் எப்படி எப்போது உறுதிப்படுத்தப்பட்டது?

கலை.......இது பற்றி குறிப்பிடுவதற்கு முன் நவ சீனா நிறுவப்பட்ட பின்னணி பற்றி கூற வேண்டியிருக்கின்றது.

ரவிச்சந்திரன்......சரி, விளக்கமாகக் கூறுங்கள்.

கலை.......நவ சீனா 1949ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டது முதல் 1952ம் ஆண்டு வரையான மூன்று ஆண்டு காலக்கட்டத்தில் பண வீக்கக் கட்டுப்பாடு, போருக்கு பிந்தைய தேசிய பொருளாதார மீட்சி ஆகியவை தொடர்பான பல்வகை கொள்கைகளை சீன அரசு வகுத்தது.

ரவிச்சந்திரன்......இந்த மூன்று ஆண்டுகால மீட்சி மூலம் தேசிய பொருளாதார நிலைமை எப்படி மேம்பட்டது?

கலை.......அப்போது தொழிற்துறை உற்பத்தி மதிப்பு சீனாவின் வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை தாண்டியது.

ரவிச்சந்திரன்......அப்படியிருந்தால் அப்போது சீன தேசிய பொருளாதார நிலைமை பரவாயில்லை என்று கூறலாம். அல்லவா?

கலை.......அப்படியில்லை. காலஞ்சென்ற தலைவர் மாவ் சே துங் அப்போதைய நிலைமையை வர்ணித்ததை பார்க்கலாம். நபர்வாரி தொழிற்துறை உற்பத்திப் பொருட்களின் சராசரி அளவு மற்றும் அப்போதைய தொழிற்துறைக்கும் வேளாண் துறைக்குமிடையிலான சராசரி விகிதத்தை கணக்கிட்டால் சீனா இன்னும் பொருளாதாரம் பின்தங்கிய வேளாண் நாடாக இருந்தது.

ரவிச்சந்திரன்......இந்த நிலைமையில் சீன அரசு வேறு என்ன முயற்சி செய்தது?

கலை.......குறுகிய காலத்தில் சீனாவின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி 1953ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் ஆகஸ்ட் திங்கள் வரை தேசிய நிதி கூட்டத்தை நடத்தியது. முக்கியமாக இடைக்கால பொது நெறியை எவ்வாறு பின்பற்றுவது என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 1953-1957 வரையான காலம் சீனாவின் முதல் தேசிய பொருளாதார வளர்ச்சித் திட்டகாலமாக இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது.

ரவிச்சந்திரன்......சுருங்கக் கூறினால் இது சீனாவின் முதலாவது ஐந்தாண்டு திட்டம் என்று கூறலாம். அப்படிதானே.

கலை.......ஆமாம்.

ரவிச்சந்திரன்......அப்படியிருந்தால் இந்த முதல் ஐந்தாண்டு திட்டத்தின் அடிப்படை கடமை என்ன?

கலை.......அப்போதைய சோவியத் யூனியன் உதவி செய்த 166 கட்டுமான திட்டப்பணிகளை மையமாக கொண்ட திட்டம் மூலம் நவ சீனாவின் தொழிற்துறை பாய்ச்சல் ரக வளர்ச்சியை நிறைவேற்றியது. அதேவேளையில் கூட்டுமை கொண்ட கிராமப்புற உற்பத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தை வளர்க்க இந்த முதல் ஐந்தாண்டு திட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

ரவிச்சந்திரன்......இந்த தகவலை கேட்கும் போது முதல் ஐந்தாண்டு திட்டத்தில் சீனா தொழிற்துறையை வளர்ப்பதற்கு அடிப்படை இட்டது என்று புரிகிறது.

கலை.......ஆமாம். அப்போது பெரும் தொகுதி தொழில் நிறுவனங்கள் உற்பத்தியில் இறங்கின.

ரவிச்சந்திரன்......இதை மேலும் தெளிவாக அறிந்து கொள்ள எடுத்துக்காட்டுகளை கூறுவீர்களா?

கலை.......மகிழ்ச்சி. 1956ம் ஆண்டு சீனாவில் முதலாவது கனரக வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையான சாங்ச்சுன் முதலாவது வாகனத் தயாரிப்பு தொழிற்சாலை தனது முதல் வாகனத்தை தயாரித்தது. சீனாவின் முதலாவது விமான தயாரிப்பு தொழிற்சாலை சோதனை முறையில் முதலாவது ஜெட் விமானத்தை தயாரித்தது. சன்யான் முதலாவது இயந்திர தொழிற்சாலையான சீனாவின் முதலாவது இயந்திர தொழிற்சாலை நிறுவப்பட்டு உற்பத்தியில் இறங்கியது.

ரவிச்சந்திரன்......இந்த ஐந்தாண்டுகளில் பல தொழிற்சாலைகள் முதன்முறையாக நிறுவப்பட்டன. ஆக முதலாவது ஐந்தாண்டு திட்டம் மாபெரும் சாதனைகளை பெற்றது. அப்படிதானே.

கலை.......ஆமாம். 1956ம் ஆண்டில் சீன அரசு முதலாவது ஐந்தாண்டு திட்டம், ஓராண்டு காலத்துக்கு முன்னதாகவே நிறைவேற்றப்பட்டது என்று அறிவித்தது. அப்போதைய தொழிற்துறை உற்பத்தி மதிப்பு 1949ம் ஆண்டில் இருந்த 30 விழுக்காட்டிலிருந்து 1957ம் ஆண்டில் 56.7 விழுக்காடாக அதிகரித்தது. பொருளாதார கட்டமைப்பில் முக்கிய மாற்றம் ஏற்பட்டது. தொழிற்துறைமயமாக்க முற்போக்குத் திட்டத்திற்கு உறுதியான அடிப்படை உருவாக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040