• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவுக்கும் மனித குலத்திற்கும் புகழ் சேர்த்த எட்கர் ஸ்னோ
  2009-12-08 14:30:07  cri எழுத்தின் அளவு:  A A A   

இப்போது சீனர்களின் சர்வதேச நண்பர்களது வாழ்க்கை மற்றும் கதைகள் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடந்த வார நிகழ்ச்சியில் சீன மக்களின் நம்பகரமான இந்திய இளம் மருத்துவர் ஷாந்தாராம் கோட்னிஸ் பற்றி அறிமுகப்படுத்தினோம். இன்றைய நிகழ்ச்சியில் சீனத் தலைவர்கள் மற்றும் மக்களின் நம்பகரமான நண்பர் எட்கர் ஸ்னோவின் கதையை விவரிக்க விரும்புகின்றோம்.


அமெரிக்க வரலாற்றியல் அறிஞர்களின் மதிப்பீட்டின் படி
மார்க்கோ போலோவுக்கு பின் மேலை நாடுகள் சீனாவை அறிந்து கொள்வதில் மிகவும் செல்வாக்கு கொண்ட மேலை நாட்டவராகவும் சீனத் தலைவர்களின் நம்பிக்கைக்குரிய ஒரேயொரு அமெரிக்கராகவும் எட்கர் ஸ்னோ திகழ்ந்தார். அமெரிக்கச் செய்தியாளரும் எழுத்தாளருமான அவர் 20ம் நூற்றாண்டின் முற்பாதியில் சீன மக்கள் துன்பப்படுவதையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான புரட்சியின் உண்மையையும் உலக மக்களின் பார்வைக்கு கொண்டுசென்றார். அவர் சீன புரட்சித் தலைவர்கள் மற்றும் சீன மக்களுடன் ஆழந்த நட்புறவை உருவாக்கினார்."நான் சீனாவை விரும்புகின்றேன். மரணமடைந்த பின் எனது சாம்பலின் ஒரு பகுதியை சீனாவில் வைக்க வேண்டும்"என்று துணைவிக்கு எழுதிய இறுதிக்குறிப்பில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
1972ம் ஆண்டில் அமெரிக்க அரசுத் தலைவர் ரிச்சாட் நிக்சன்
பெய்சிங் வந்து சீனாவுக்கு எதிரான பகைமையை முறியடிக்கும் முதல் பயணத்தை மேற்கொண்வதற்கு முன் சீனத் தலைவர்கள் மக்கள் மகாமண்டபத்தில் எட்கர் ஸ்னோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். அந்த அஞ்சலி செலுத்திய நிகவ்வில் காலஞ்சென்ற தலைவர்களான மோச்செதுங், ச்சௌஅன்லாய், சுன்சிங்லின் ஆகியோரும் இதர தலைவர்களும் ஸ்னோவின் துணைவியாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இதை பற்றி ஸ்னோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அமெரிக்க அறிஞர் ஜோன் ஹெமில்ட்டன் தம் குறிப்பில் எழுதியுள்ளார். ஹெமில்டன் சீனா மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். பள்ளியில் கல்வி பயின்ற போது ஸ்னோ எழுதிய நூல்களை படித்தார். ஸ்னோ மரணமடைந்த பின் அவரை பற்றி ஹெமில்ட்டன் 10 ஆண்டுகளாக ஆய்வு செய்தார். 80ம் ஆண்டுகளில் அவர் படைத்த "எட்கர் ஸ்னோ"எனும் நூல் வெளியாகியது. ஸ்னோ படைத்த "சீனாவின் மேல் சிவப்பு நட்சத்திரம்"எனும் நூல் சீனரையும் சீனாவை பற்றி மேலும் கூடுதலாக.

 
30ம் ஆண்டுகளில் அமெரிக்கருக்கு மட்டுமல்ல சீனருக்கும் இந்நூல் வெளிநாட்டுக்கு தங்களை திறக்கும் தன்மை வாய்ந்த கருவியாகியது. அப்போது சீன மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை அறிந்து கொள்ள வில்லை. இந்த நூல் அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை அறிந்து கொள்ளும் சன்னலாக ஆனது. இந்த நூலை படித்த பின் பல சீனர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர யேன் ஆனுக்கு சென்றனர். செய்தியாளராக கனவு கண்ட பல இளைஞர்கள் எட்கர் ஸ்னோ போன்று மாற விரும்பினர். ஏனென்றால் ஸ்னோவிடமிருந்த துணிவும் எழுச்சியும் அனைவரையும் கவர்ந்தன. சீனாவில் தலைவர் மோச்செதுங் அவர்களை சந்தித்த பின் மிகவும் முக்கிய செய்தியை ஸ்னோ அறிவித்தார் என்று ஹெமில்ட்டன் வர்ணிக்கின்றார்.
"சீனாவின் மேல் சிவப்பு நட்சத்திரம்"எனும் நூல் எட்கர் ஸ்னோ படைத்த முக்கிய நூல்களில் ஒன்றாகும். 1936ம் ஆண்டு ஜுன் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரையான காலத்தில் ஸ்னோ சீனாவின் செக்கான்னின் பிரதேசத்தில் மோச்செதுங், பெண்டெகுவான் உள்ளிட்ட செஞ்படைத் தலைவர்களிடம் பேட்டி கண்டார். அவர் சீனப் புரட்சிப் பிரதேசத்தில் சீனப் புரட்சியின் தலைவர்களை பேட்டி கண்ட மேலைநாட்டுச் செய்தியாளராக மாறினார். 1937ம் ஆண்டு பெய்சிங்கில் 3 லட்சம் எழுத்துக்கள் கொண்ட "சீனாவின் மேல் சிவப்பு நட்சத்திரம்"நூல் மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது.


1928ம் ஆண்டு சீனாவுக்கு வந்து 1941ம் ஆண்டில் சீனாவிலிருந்து புறப்பட்ட ஸ்னோ சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய மக்கள் புரட்சியையும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரையும் முழுமையாக கண்டு செய்தி அளித்தார். இந்த நீண்டகால சீன வாழ்வை ஸ்னோ எதிர்பார்க்க வில்லை. சீனா வந்தடைந்த போது ஸ்னோவுக்கு வயது 21. ஓராண்டில் பல்வேறு நாடுகளில் பயணம் மேற்கொண்ட பின் நியூயார்க் திரும்பலாம். 30 வயதுக்கு முன் நன்றாக சம்பாதித்த பின்னர் எழுதுவதிலும் ஆய்விலும் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது சீனாவில் கண்ட கேட்டறிந்த செய்திகள் அவரது திட்டத்தை மாற்றின. இது பற்றி ஜோன் ஹெமில்ட்டன் மீளாய்வு செய்து கூறியதாவது.
என்னை போன்ற வெளிநாட்டவர் பலர் சீன மக்கள் மிகவும் விருந்தோபல் உடையவர்கள் என்று கருதுகின்றனர். சீனா வலிமை மிக்க சுதந்திரம் கொண்ட நாடாக மாற வேண்டும். சீன மக்கள் மகிழ்ச்சியுடன் நலமாக வாழ வேண்டும் என்று ஸ்னோவை போன்ற பலர் விரும்புகின்றனர். அப்போது சீனாவில் பல புதிய நிகழ்வுகள் நடந்தன. நாள்தோறும் பல விடயங்கள் நிகழ்ந்தன. எனவே ஸ்னோ சீனாவில் பத்துக்கு அதிகமான ஆண்டுகள் தங்கியிருந்தார் என்று அவர் கூறினார்.
சீன மக்களின் துன்பம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் துன்பத்தை மாற்ற மேற்கொண்ட போராட்டம் ஆகியவற்றை கண்டு ஸ்னோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாபெரும் அனுதாபத்தையும் ஆதரவையும் அளித்தார். அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் அவர் பத்துக்கு மேலான ஆண்டுகள் நண்பரா பழகினார். செஞ்படையின் ஆடையை அணிந்துகொண்டு நான்கு திங்களாக செஞ்படைப் பிரிவுகளை பேட்டி கண்டார். அவர் 30 மில்லிமீட்டர் புகைப்படக் கருவியை பயன்படுத்தி நிழற்படங்களை எடுத்தார். அவர் எடுத்த சிவப்பு நட்சத்திரம் கொண்ட எட்டு கோணத் தொப்பியை அணிந்த மோச்செதுங்கின் நிழற்படத்தை அனைத்து சீனரும் பாரம்பரிய படைப்பாக பதிவு செய்தனர்.


1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்பட்ட பின் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தொடர்பு 20 ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டது. ஸ்னோ தான் விசா பெற்று சீனாவில் பயணம் மேற்கொண்ட ஒரேயொரு அமெரிக்கராவார். அந்த காலத்தில் அவர் மூன்று முறை நீண்டகால பயணம் மேற்கொண்டார். 1970ம் ஆண்டு அக்டோபர் முதல் நாள் நவ சீனா நிறுவப்பட்டதன் 21வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நடைபெற்ற போது மோச்செதுங், ச்சௌஅன்லாய் உள்ளிட்ட சீனக் கட்சி மற்றும் அரசின் தலைவர்களுடன் இணைந்து டியன் ஆன் மன் கட்டிடத்தில் ஸ்னோ தான் அக்கொண்டாட்ட இராணுவ அணி வகுப்பை பார்வையிட்ட வெளிநாட்டவராவார். இராணுவ அணி வகுப்பை பார்வையிட்ட போது எடுக்கப்பட்ட நிழற்படம் ஸ்னோ பற்றிய வரலாற்று குறிப்பு என்ற இதழின் முதல் பக்கத்தின் நிழற்படமாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட எட்கர் ஸ்னோ அமெரிக்காவில் கம்யூனிச எதிர்ப்புவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டார். கல்வியியல் மற்றும் செய்தி ஊடகங்களிலும் அவர் குறைக்கூறப்பட்டார். 1959ம் ஆண்டு அவர் குடும்பத்தோடு ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவாவில் குடியேறினார். அங்கே அவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். நோய்வாய்ப்பட்ட போதும் அவர் சீன சோஷ்லிச புரட்சி மற்றும் கட்டுமானத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். ஜோன் ஹெமில்ட்டன் கூறியதாவது.


ஸ்னோவிடமிருந்த மிக சிறந்த தன்மை நேர்மை. மிகவும் நேர்மையான செய்தியாளர்களில் ஒருவர் அவராவார். கம்யூனிச எதிர்ப்புவாத கொள்கை காலத்தில் பல செய்தியாளர்கள் தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள கோட்பாடுகளை கைவிட்டனர். ஸ்னோ அப்படி செயல்பட வில்லை. அவர் தனது கோட்பாடுகளில் ஊன்றி நின்றதால் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் மதிப்பை பெற்றார் என்று ஜோன் ஹெமில்ட்டன் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்னோ மரணடைந்த பின் அவரை நியாயமாக நடத்தாத அமெரிக்கர்கள் படிப்படியாக சுய சோதணை செய்தனர். ஸ்னோவின் மதிப்பை மீண்டும் மக்கள் அறிய துவங்கினர்.
அறிஞர்களுக்கும் சீனாவை அறிந்து கொள்ள விரும்புவோருக்கும் ஸ்னோவின் படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அந்நூல்கள் வரலாற்றை உறுதிப்படுத்தும் சாட்சிகளாக இருப்பதில் ஐயமேயில்லை என்றார் ஜோன் ஹெமில்ட்டன்.
இப்போது ஸ்னோவின் கல்லறை அவர் ஆசிரியராக பணி புரிந்த பீங்கிங் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் பாய்ந்து ஓடும் ஆற்றின் கரையில் உள்ளது. சீன மக்களின் அமெரிக்க நண்பர் எட்கர் ஸ்னோ என்ற எழுத்துக்கள் தூபியில் செதுக்கப்பட்டுள்ளன. தனது கல்லறையில் இவ்வாறு எழுத ஸ்னோ தனது விருப்பத்தை முன்பு தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040