• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீண்டப்படை நடப்பு பற்றிய விளக்கம் 1
  2009-12-14 11:17:45  cri எழுத்தின் அளவு:  A A A   
"fullScreen" VALUE="0">







 

வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். கடந்த நிகழ்ச்சியில் சோதனை முறையிலுள்ள புதிய தமிழ் இணையம் பற்றி கலையரசி வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் இருவரும் நடத்திய உரையாடல் ஒலிபரப்பபட்ட பின் பல நேயர் நண்பர்கள் தெரிவித்த வரவேற்பில் ஊக்கமடைந்துள்ளோம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி உண்மையாக நேயர் நண்பர்களின் ஐயங்களை தீர்ப்பதற்கு துணை புரியும் நிகழ்ச்சியாக நடத்த ஆவலுடன் இருக்கின்றோம். ஆகவே முடிந்த வரை நேயர் நண்பருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்த விரும்புகின்றோம். இன்று வளவனூர் புதுப் பாளையம் எஸ் செல்வம் அவர்களை அழைத்து அவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கின்றோம்.



செல்வம்.......தொடர்ந்து நான் கேட்ட வினாக்களுக்கு விடையளிப்பதற்கு மிக்க மிக்க நன்றி. நான் சீனாவின் புரட்சி லட்சியத்தில் நீண்டகாலம் மிகவும் கவனம் செலுத்தியுள்ளேன். நவ சீனா நிறுவுவது, விடுதலைக்கு முன் காலஞ்சென்ற தலைவர் மோச்செதுங் தலைமையிலான சீன புரட்சி, சீனாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கலந்தாய்வு மாநாட்டு முறைமை போன்ற விடயங்களில் நான் மிகவும் கவனம் செலுத்தியுள்ளேன்.
கலை......ஆமாம். நாங்கள் அதை கவனித்துள்ளோம். ஆகவே இன்று நீங்கள் கேட்ட பல வினாக்களிலிருந்து ஒரு தலைப்பை தேர்வு செய்து விவாதிக்கலாம் என்று நினைக்கினேன்.
செல்வம்.......அப்படியிருந்தால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீனச் செம்படை மேற்கொண்ட பத்தாயிரம் லீ நீண்டப்படை நடப்பு பற்றி விவாதிக்கலாமே.
கலை......மகிழ்ச்சி. அப்படியிருந்தால் பழைய வழிமுறையை பின்பற்றி நீங்கள் வினா முவையுங்கள். நான் பதிலளிப்பேன். எப்படி?
செல்வம்.......நல்லது. நீண்டப்படை நடப்பு என்பது பற்றி குறிப்பிட்டால் முதலில் இந்தச் சொற்களின் பொருள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அப்படித்தானே?
கலை......சரி. சொற்களை பார்த்தால் இருப்பத்தையாயிரம் லீ என்றால் பத்தாயிரத்து 250 கிலோமீட்டராகும். இவ்வளவு தூர படை நடப்பு அப்போதைய சீனச் செம்படை நடத்தியது. மிகவும் பிரமாண்டமான இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
செல்வம்.......அப்படியிருந்தால் சீனச் செம்படை நீண்டப்படை நடப்பு நடத்திய காரணம் என்ன? அல்லது எதற்காக சீனச் செம்படை இவ்வளவு தொலை தூரம் இடமாற்றம் நடத்த வேண்டும்?



கலை......70 ஆண்டுகளுக்கு முந்தைய சீனப் புரட்சி சூழ்நிலையை பார்த்தால் இப்போது சீனாவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அப்போது மிகச் சிறிய பிரிவாக கருதப்பட்டது. அதன் தலைமையிலான சீனச் செம்படையினர் எண்ணிக்கை அப்போது சீனாவை ஆட்சி புரிந்த கோமிந்தாங் கட்சி தலைமையிலான மத்திய படையினரின் எண்ணிக்கையை விட மிகமிகக் குறைவாகும். ஆகவே இராணுவ ஆற்றலை பார்த்தால் சீனச் செம்படை மத்திய படையுடன் மோத முடியாது. அப்போது சிங்கெச்சிக் சீனச் செம்படையை அழிக்க வேண்டும். செம்படையின் ஆற்றல் அப்போது மிகமிக பலவீனமானது. மேலும் மத்திய படைப்பிரிவுகள் சீனச்செம்படை மீது தொடர்ச்சியாக 5 முறை கடும் தாக்குத்தல்களை அடுத்தடுத்து தொடுத்தன.
செல்வம்.......ஆகவே இந்த சூழ்நிலையில் சீனச் செம்படை அதன் உயிராற்றலை நிலைநிறுத்தும் வகையில் இராணுவ இடமாற்றத்தை மேற்கொண்டது.
கலை......ஆமாம்.
செல்வம்.......இந்த இராணுவ இடமாற்றம் எத்தனை மாநிலங்களை கடந்து செந்றது? எத்தனை நாட்கள் நடந்தது?
கலை......இது சீன வரலாற்றில் மட்டுமல்ல உலக இராணுவ வரலாற்றிலும் முன்கண்டிராத இராணுவ இடமாற்றமாகும். 1934ம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் சீனச் செம்படையின் நீண்டப்படை நடப்பு துவங்கியது. 1936ம் ஆண்டு அக்டோபர் திங்கள் வரை அது நீடித்தது. மொத்தம் 11 மாநிலங்களின் ஊடாக நீண்டப்படை நடப்பு நடந்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040