• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன மக்களின் உள்ளதில் வாழும் மருத்துவர் Normman Bethune
  2009-12-15 10:39:26  cri எழுத்தின் அளவு:  A A A   








இப்போது சீனர்களின் சர்வதேச நண்பர்களது வாழ்க்கை மற்றும் கதைகள் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடந்த வார நிகழ்ச்சியில் சீன மக்களின் நம்பகரமான அமெரிக்க எழுதாளரும் செய்தியாளருமான எட்கர் ஸ்னோவின் கதையை அறிமுகப்படுத்தினோம். இன்றைய நிகழ்ச்சியில் சீன மக்களின் உள்ளதில் வாழும் கனெடிய மருத்துவர் Normman Bethune பற்றி கூறுகின்றோம்.

மருத்துவர் Normman Bethune பற்றி குறிப்பிட்டால் சீன மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக சீன மக்கள் மேற்கொண்ட போராட்டத்துக்கு டாகடர் Normman Bethune தலைசிறந்த பங்கு ஆற்றினார். சீனாவில் அவர் உயிர் துறந்தார். சீன மக்கள் இந்த வீரரை என்றுமே நினைத்துவருகின்ற போது அவர் பிறந்த ஊரான கனடாவில் மக்கள் சீன-கனெடிய நட்புக்கு உற்சாகத்துடன் பங்கு ஆற்றிய மருத்துவர் Normman Bethuneஐ எப்படி மதிப்பார்கள்?நமது செய்தியாளர் குவான் சேன்சேன் மருத்துவர் Normman Bethuneவின் நினைவக பணியாளர்களிடம் நேர்காணல் மேற்கொண்டார். இந்த நினைவகம் மருத்துவர் Normman Bethune பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கனெடிய காட்டாட்சி அரசு 1973ம் ஆண்டில் இவ்விடத்தை வாங்கி மருத்துவர் Normman Bethuneக்கு நினைவகத்தை எழுப்பியது. 1976ம் ஆண்டில் அது மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. நினைவகத்தின் தலைவர் ஸகோட் டேவிட்சன் கூறியதாவது.

ஆண்டுதோறும் பத்தாயிரம் மக்கள் இங்கே வந்து மருத்துவர் Normman Bethuneவுக்கு மரியாதை தெரிவித்து வருகின்றனர். இவர்களில் 45 விழுக்காட்டினர் சீனாவிலிருந்து வருகை தரும் பயணிகளாவர். சீனாவில் தான் மருத்துவர் Normman Bethune தனது உயிரை அர்பணித்தார். ஆகவே சீன மக்கள் கனடா வந்து மருத்துவர் Normman Bethuneயின் பிறந்த ஊரில் பயணம் செய்கிறார்கள் என்று அவர் கூறினார்.

மருத்துவர் Normman Bethune 1890ம் ஆண்டு மத குருவின் குடும்பத்தில் பிறந்தார். 1916ம் ஆண்டு அவர் டோரன்டோ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். வசதியான வாழ்க்கையை கைவிட்டு அவர் அப்போதைய பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1935ம் ஆண்டு நவம்பர் திங்கள் கனெடிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1937ம் ஆண்டு ஜுலை திங்கள் 7ம் நாள் ஜப்பான் சீனாவை ஆக்கிரமிக்க தொடங்கியது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் 1938ம் ஆண்டு மே திங்கள் கனெடிய மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இவ்விரு நாட்டு மருத்துவர்கள் இடம்பெற்ற மருத்துவக் குழுவுக்கு தலைமை தாங்கி சீனாவின் புரட்சி மையமான யேன் ஆன் சென்றடைந்தார். சீனாவில் தங்கியிருந்த போது சீனப் படைப்பிரிவுகளின் மருத்துவ திறனை உயர்த்துவதற்காக அவர் மிகவும் முக்கிய பங்கு ஆற்றினார். போர் தளங்களில் காயமுற்ற படைவீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இரண்டு பகல் இரண்டு இரவுகள் அவர் ஓய்வு பெறாமல் 71 அறுவை சிகிச்சை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 1939ம் ஆண்டு அறுவை சிகிச்சையளித்த போது அவருக்கு நச்சுக் கிருமியால் தொற்று ஏற்பட்டது. அதே ஆண்டு நவம்பர் திங்கள் 12ம் நாள் அவர் ரத்தத்தில் நச்சு இலக்கும் சப்ரிமியா நோயினால் மரணமடைந்தார். கடந்த பல பத்துக்கு மேலான ஆண்டுகளில் அவரை பற்றிய நிகழ்வுகள் தலைமுறை தலைமுறையான சீனர்களை மனமுருகச் செய்கின்றன. இது பற்றி மருத்துவர் Normman Bethune நினைவகத்தில் பணிபுரிகின்ற ச்சான் குன் அம்மையார் கூறியதாவது.

இங்கே வந்து மரியாதை செய்யும் அனைவரும் அவரை மதிக்கும் மனத்துடன் இருக்கிறார்கள். அனைவரும் மருத்துவர் Normman Bethuneனை பற்றி குறிப்பிட்ட அளவு அறிந்தும் உள்ளனர். சீனாவுக்கு அவர் மாபெரும் பங்கு ஆற்றினார். அவரை மதிக்கின்ற உணர்வுடன் இங்கு வந்து மருத்துவர் Normman Bethuneக்கு மரியாதை செய்கின்றனர். நாங்கள் செய்யும் இந்த மரியாதையை சீன மக்கள் நன்றி தெரிவிப்பதன் ஒரு பகுதியாக உணர்கின்றோம். நாங்களும் மருத்துவர் Normman Bethuneவின் உடன்பிறப்புகளாக கருதுகின்றோம். எங்களுக்கு மிகவும் மதிப்பு அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

மருத்துவர் Normman Bethuneவின் பெயரை குறிப்பிட்ட உடனே மக்களின் மனதில் கனெடிய நண்பர் என்ற மறுமொழி வெளிப்படுகின்றது. மருத்துவர் Normman Bethune சீனாவில் தங்கிருந்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அவர் சீன-கனெடிய நட்புக்கு ஆற்றிய பங்கு என்றுமே மறக்கப்பட முடியாதது என்று அந்நினைவகத்தின் தலைவர் குறிப்பிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது.

சீனாவுக்கும் கனடாவுக்குமிடையில் நட்புத் தலைவர் மோச்செதுங்

மருத்துவர் Normman Bethuneவின் நினைவுக்காக எழுதிய கட்டுரையால் வளர்க்கப்பட்டுள்ளது. சீன மக்கள் அனைவரும் இந்த கட்டுரையை வாசித்த பின்னர் தான் மருத்துவர் Normman Bethuneஐ அறிந்து கொண்டுள்ளனர். தனது உயிரையும் பொருப்படுத்தாமல் சீனாவுக்கு வந்து சீன மக்களுக்கு உதவி வழங்கி இறுதியில் சீனப் புரட்சிக்கு உயிரை அர்பணித்தார். அவர்தான் சீன-கனெடிய நட்புக்கு பங்கு ஆற்றினார் என்று அவர் கூறினார்.

மருத்துவர் Normman Bethuneயின் நினைவகம் சீன-கனடா நட்பு வளர்ச்சிக்கு சாட்சியாக விளங்குகின்றது. 1973ம் ஆண்டு அக்டோபர் திங்கள் கனடா தலைமை அமைச்சர் டரூடியோ சீனாவில் பயணம் மேற்கொண்ட போது மருத்துவர் Normman Bethuneவின் வீரமான செயல்பாட்டையும் சீன மக்களின் உள்ளத்தில் அவர் கொண்டுள்ள புனித நிலைமையையும் கண்டு நெகிழ்ந்து போனார். அரசே நிதி ஒதுக்கி மருத்துவர் Normman Bethuneயின் பிறந்த இடத்தை வாங்கி அதில் நினைவகத்தை கட்ட வேண்டும் என அவர் தீர்மானித்தார். நினைவகம் நிறுவப்பட்டவுடன் மருத்துவர் Normman Bethuneஐ அறிந்து கொள்ள மென்மேலும் அதிகமான கனெடிய மக்கள் ஆர்வம் காட்டினர். 1998ம் ஆண்டு மருத்துவர் Normman Bethuneவின் பெயர் கனடாவின் புகழ் பெற்ற மருத்துவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது பற்றி அந்நினைவகத் தலைவர் டேவிட்சன் பெருமையுடன் கூறியதாவது.

ஒரு சாதாரண எடுத்துக்காட்டை கூறலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கனடா வானொலி ஊடகம் மிக மகத்தான கனெடியரை தேர்தெடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. சில நூறு பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்தன. அந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசையில் மருத்துவர் Normman Bethune 26வது இடம் பெற்றிருந்தார் என்றார் அவர்.

மருத்துவர் Normman Bethune மரணமடைந்த 70வது நிறைவு ஆண்டு இவ்வாண்டாகும். இருந்தாலும் சீனா கனடா மற்றும் உலகம் முழுவதும் கூட இந்த வீரரை மறக்கவே இல்லை. சீனா கனடாவின் Toronto, Montreal ஸ்பெயின் ஆகிய நான்கு நாடுகள் மற்றும் இடங்களில் மருத்துவர் Normman Bethuneக்கு நினைவு நடவடிக்கைகள் நடைபெற்றன.

நவம்பர் 12ம் நாள் இவரது சர்வதேச ரீதியான நினைவு நடவடிக்கை நடைபெற்றது. சீனாவின் ஸிச்சியாச்சுவான் மருத்துவர் Normman Bethune இராணுவ கல்லூரி மற்றும் ஸ்பெயின் நாடு இதற்கு உற்சாகமான ஆதரவு அளித்தன என்றார் அவர்.

இப்போது மேலும் அதிகமான இளைஞர்கள் மருத்துவர் Normman Bethuneஐ ஆர்வத்துடன் அறிய விரும்புகின்றனர். இவ்வற்றை கண்டு இந்நினைவகத்தின் பணியாளர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது. தமது முயற்சிகள் மூலம் மேலும் அதிகமான மக்கள் மேலும் பன்முகங்களிலும் மேலும் உண்மையான மருத்துவர் Normman Bethuneஐ அறிய துணை புரிய வேண்டும். அவரது வாழ்க்கையும் வாழ்க்கை நிகழ்வுகளும் கதைகளும் தலைமுறை தலைமுறையாக வெளிக்கொணரப்பட வேண்டும் என்று இந்நினைவகப் பணியாளர்கள் விரும்புகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040