செல்வம்.......நீண்டப்படை நடப்பு துவங்கும் இடம் முடிவடையும் இடம் ஆகியவை பற்றி தகவல் கூறுங்கள்.
கலை......மகிழ்ச்சி. சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஜியாங் சீ மாநிலம் சீன புரட்சி வளர்ச்சியடைந்த இடங்களில் முக்கிய இடமாக புகழ் பெற்றுள்ளது. புரட்சித் தொட்டில் என்று அழைக்கப்படுகின்ற சிங்காங் மலை இந்த மாநிலத்தில் உள்ளது. இப்போது கூட செந்நிற புரட்சி சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் போது மக்கள் முதலில் சிங்காங் மலையை தேர்வு செய்வர். நான் மூன்று முறை சிங்காங் மலைக்கு சென்று சுற்றுலா பயணம் அல்லது முன்மாதிரி ஊழியர் விடுமுறை ஓய்வுப் பயணம் மேற்கொண்டேன். ஜியாங் சீ மாநிலத்தில் யூ து என்னும் இடம் இருக்கின்றது. அதுதான் சீன செம்படை நீண்டப்படை நடப்பு துவக்கிய முனையிடமாகும். யூ து வாசிகள் செம்படை மீது சிறப்புணர்வு கொண்டுள்ளனர். 1934ம் ஆண்டு அக்கோடர் திங்கள் சீன செம்படையின் முக்கிய பிரிவுகளின் தலைமையின் கீழுள்ள 86 ஆயிரம் படைவீரர்கள் யூ துவில் திரண்டி 8 துறைமுகங்களின் வழியாக ஒரே நேரத்தில் யூ து ஆற்றை கடந்து உலகில் புகழ் பெற்ற நீண்டப்படை நடப்பை துவக்கினர். 86 ஆயிரம் படைவீரர்களில் 68 ஆயிரம் பேர் யூ துவை சேர்ந்தவர்கள். அப்போது யூ துவிலுள்ள இளைஞர்கள் பெரும்பாலாக செம்படையில் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டனர்.
செல்வம்.......இது மிகவும் மதிப்பிடத்தக்க வரலாற்று முயற்சியாகும். மக்கள் அவர்களை மறக்கவே கூடாது. யூ து மக்கள் சீனப் புரட்சி இலட்சியத்துக்கு உண்மையாகவே உயிரை அர்ப்பணித்தனர்.
கலை......ஆமாம். வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தியாகிகளில் யூ துவை சேர்ந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 336 ஆகும். தந்தைகள் செம்படையுடன் தொடர்பு கொண்டதால் இப்போது யூ து மக்கள் செம்படையின் மீது ஒரு தனிச்சிறப்புணர்வு கொண்டுள்ளனர்.
செல்வம்.......இது பற்றி விபரமாக குறிப்பிடுங்கள்.
கலை......ஜியாங் சீ மாநிலத்தின் யூ துவில் சாலைகள், பூங்காக்கள், உணவு விடுதிகள், வணிக அங்காடிகள் போன்றவை நீண்டப்படை நடப்பு பெயரிடப்படுகின்றன.
செல்வம்.......யூ து மாவட்ட மக்கள் செம்படையின் எழுச்சியை வெளிக்கொணர்ந்து சோஷியலிச நவீனமயமாக்க புரட்சியில் ஈடுபட்டு செழுமையுடன் வாழ பாடுபடுகின்றனர் என்பது எண்ணி நான் அவர்களை பாராட்டுகின்றேன்.