• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் மூலம் தெரிவித்த கருத்துக்கள்
  2009-12-17 09:39:16  cri எழுத்தின் அளவு:  A A A   







வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன அரசுத் தலைவர் துர்க்மேனிஸ்தான் நாட்டில் பயணம் மேற்கொண்ட தகவலை அறிந்து மகிழ்ந்தேன். குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல், தூதாண்மை உறவை வளர்க்கும் முயற்சியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கும் சீன அரசுத் தலைவருக்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இருதரப்பு நல்லுறவு நிறுவப்பட்டு 17 ஆண்டுகளே ஆனபோதிலும், உறவை வளர்ப்பதிலான ஆர்வமும் அக்கறையும் இப்பயணத்தின் மூலம் வெளிப்படுகின்றது. சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த நாடுகளுடன் சீனா, சிறப்பான உறவை நிறுவி வருவதை இப்பயணம் காட்டுகிறது.
தென்பொன்முடி, தெ. நா. மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சீனாவின் வேளாண் துறையில் இணையதள பயன்பாடு பற்றி கலையரசி அவர்களும் ஊட்டி எஸ்.கே.சுரேந்திரன் அவர்களும் கலந்துரையாடல் நடத்தினர். ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். இணைய வசதிகளை அத்துறையில் புகுத்தி சீனா கண்டுள்ள வளர்ச்சிகள் மூலம் மக்கள் விளைச்சலை பெருக்கி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதை தெளிவாக தெரிந்து கொண்டேன்.


நாகர்கோயில், பிரின்ஸ் ராபட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் விவசாயம் பற்றிய கட்டுரை கேட்டேன். திபெத்தில் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பில் முன்னேறியுள்ள நிறுவனம் ஒன்றின் 2007-ஆம் ஆண்டு வரையான நிலையான சொத்து சுமார் 50 கோடி யுவானை எட்டியுள்ளது. சீன நடுவண் அரசின் திட்டங்களால், திபெத் எல்லா துறைகளிலும் முன்னேறி வருவதை உலக மக்களுக்கு எடுத்துச்சொல்வதை விட்டுவிட்டு, குறைகூறும் தலாய்லாமா குழுவினரின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர்
சீன வானொலி நிலையத்தில் வானொலி கன்பிசியஸ் கழக பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றதை இணையதளத்தின் மூலம் புகைப்படம் மற்றும் செய்திகள் வாயிலாக அறிந்தேன். சீன மொழியை உலகம் முழுக்க பரவும் நோக்கில் இந்த கழகத்தின் செயல்பாடுகள் அமைய இருப்பதின் மூலம், மக்களிடையே ஒற்றுமை அமைதி பன்பாட்டு பரிமாற்றம் ஏற்படும் என்பது நிச்சயம். இதனை நமது நேயர்கள் மூலம் கொண்டு செல்வது இன்னும் சாலச்சிறந்ததாக இருக்கும்.


புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் பொருளாதார அதிகரிப்பு ஆற்றல் வேகம் வலுவான நிலையில் இருப்பதை செய்தி விளக்கத்தில் அறிந்து மகிழ்தேன். சீனாவின் தேசிய புள்ளிவிவர ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி இவ்வாண்டின் நவம்பர் திங்களில் சீன மக்க்ளின் நுகர்வுப் பொருட்களின் விலைவாசி குறியீடு கடந்த ஆண்டு நவம்பர் திங்கள் இருந்த்தைவிட 0.6% அதிகரித்திருப்பது, சீனாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி நிலைமையை வெளிப்படுத்துகின்றது நவ சீனாவின் மொத்த வெளி நாட்டு வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகையும் கடந்த ஆண்டு நவம்பர் திங்களை விட 9.8% அதிகமாகியுள்ளது பாராட்டுக்குரியது. சீனாவின் முக்கிய தொழிற்துறைகளின் வளர்ச்சியிலும், நிதி வருமானத்திலும் கடந்த ஆண்டை விட அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது தொடர் வளர்ச்சியின் அறிகுறி.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
சீன அரசவையின் வழமையான கூட்டம் முடிவு செய்துள்ள நுகர்வை விரிவாக்கும் திட்டங்களை வரவேற்கிறேன். கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பல கொள்கைகளை தொடர்வதும், மேலும் அவற்றை மேம்படுத்தி மக்களுக்கு நன்மைகள் அளிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் மிகந்து பயன்தரும். வீட்டுப் பயன்பாட்டு மின் சாதனங்கள், உந்து வண்டி, வீடு முதலியவற்றிக்கு வரி குறைப்பு பாமர மக்கள் உள்பட பலருக்கும் நன்மைபயக்கும். இதுபோன்ற சிறப்புத் திட்டங்களால் கிராமப்புறங்களையும், அங்குள்ள விவசாய குடும்பங்களையும் இணைத்து, நுகர்வு ஆற்றலை உயர்த்த பல திட்டங்களை சீனா வகுத்துள்ளது அருமை.
அடுத்தாக, சீன வானொலி இணையதளத்தின் புதிய வடிவமைப்பு பற்றி வந்த மின்னஞ்சல்கள் இடம்பெறுகின்றன.


பேளுக்குறிச்சி க.செந்தில்
சீன வானொலி தமிழ்ப்பிரிவின் இணையத்தள பக்கத்தை திறந்தேன். இன்ப அதிர்ச்சி. புதிய வடிவமைப்பு படிக்க வசதியாக உள்ளது. பழைய தளத்தையும் பார்க்கும் வசதியுடன் வடிவமைத்து இருப்பது சிறப்பு.
சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி
தமிழ்பிரிவின் புதிய வடிவிலான இணைய தளம் நேயர்களின் நெடுநாள் ஆசையினை நிறைவு செய்யும்வகையில் வெகுச் சிறப்பாக இருக்கின்றது. புதிய நேயர்களை தன்பால் கவர்ந்து ஈர்க்கும் வண்ணம் இணைய தளத்தில் புதிய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் உருவாக்கியிருப்பது தமிழ் பிரிவின் வளர்ச்சிக்கு என்றும் துணைபுரியும்.
பரசலூர், P.S. சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ் ஒலிபரப்புச் செய்திகள் மற்றும் செய்தி விளக்கத்தில், இந்திய தலைமையமைச்சர் மன்மோகன்சிங், ரஷ்ய அரசுத்தலைவர் டிமிட்றி மெட்வதேவை சந்தித்தை அறிந்தேன். இருதரப்பு நட்பு ஒத்துழைப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், அனுசக்த்தி எரியாற்றல் மற்றும், இராணுவ உதவி குறித்த உடன்பாடுகள் கையெழுத்தானது பற்றியும் அறிந்துகொண்டேன். தற்போதைய இந்த செய்திவடிவமைப்பு நல்லதாக புதியதாய் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040