• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கடிதம் மூலம் தெரிவித்த கருத்துக்கள்
  2009-12-17 09:44:27  cri எழுத்தின் அளவு:  A A A   







கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, ஆரணி டி.இளங்கோ அனுப்பிய கடிதம். காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் சீனாவின் செயல்பாடுகளை விளக்கும் கட்டுரையை கேட்டேன். சீன தேசிய மக்கள் பேரவையின் 11வது கூட்டம் பெய்ஜிங்கில் நான்கு நாட்கள் நடைபெற்றது என்றும், இந்த கூட்டத் தொடரில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கின்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதையும் அறிந்தேன். காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் உலகோடு சீனா இணைந்து செயல்படும் விருப்பத்தையும், பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் இது உணர்த்துகிறது.


தமிழன்பன் விழுப்புரம் எஸ்.பாண்டிய ராஜன் உலக தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சி பற்றி எழுதிய கடிதம். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உலக தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சி நடைபெற்றது. இது பற்றி சீன வானொலியிலும் செய்தியிலும் அறிவிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட லேத் என்கிற கடைசல் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இதன் நிழற்படமும் செய்தித்தாளில் வெளியாகியிருந்தது. அந்த கடைசல் இயந்திரம் பற்றியும், சீனாவின் தேசிய அரங்கான பறவைக்கூடு பற்றியும் அந்த பொருட்காட்சிக்கு வந்திருந்த அனைவரும் பேசியதை பார்த்து பொருமயடைந்தேன்.
கலை இலங்கை கினிகத்தேனையிலிருந்து எம்.பி்.மூர்த்தி நட்புப்பாலம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவின் திபெத்திற்கு சுற்றுலா மேற்கொண்ட வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அவர்களின் பயண அனுபவங்கள் மிகவும் சிறப்பாக அமைந்தன. திபெத்திலுள்ள பல்வேறு இடங்களின் தகவல்களுடன் அவரது தனிப்பட்ட ஈடுபாட்டையும் ஒன்றாக தொகுத்தளித்தார். பாடல் பாடி ஆடியதையும், நூற்றுக்கு அதிகமான உணவு வகைகள் உண்டதையும் விளக்கினார். அங்குள்ள மூலிகைக் கலந்த உணவு வகை ஒன்றை உண்டால் புற்று நோய் குணமாகும் என்பதையும், மிகவும் நெருக்கமானோரை அல்லது அன்பு செய்வோரை நெத்தியோடு நெத்தியை சேர்த்து வாழ்த்தும் அற்புதமான திபெத் பாரம்பரிய வழக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த அனுபவ பகிர்வுகளை கேட்டு வியந்தேன்.


தமிழன்பன் ஈரோடு ஆர்.சுகுணா சீன தமிழொலி இதழ் பற்றி எழுதிய கடிதம். சீன தமிழொலியில் சீன தலைமையமைச்சர் வென்சியாபாவின் உரை, அது பற்றிய முன்னணி நேயர்களின் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. அத்தோடு சீனாவின் திபெத் இனப் பண்பாட்டில் தனிச்சிறப்பியல்புடைய ஓவியக்கலை வடிவமான தாங்கா ஓவியங்கள் மற்றும் அதன் தனிச்சிறப்புகளும் கூறப்பட்டிருந்தன. தலைமையமைச்சர் உரை, நேயர் கருத்துக்கள் மற்றும் தாங்க ஓவியங்கள் என முப்பெரும் பயனுள்ள தகவல்களை தாங்கியதாக அது அமைந்துள்ளது.


கலை நேயர் கடிதம் நிகழ்ச்சி பற்றி இலங்கை புதிய காத்தான்குடியிலிருந்து ஹச்.றம்ஸியா எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன். நேயர் கடிதம் நிகழ்ச்சியில் சீன வானொலி நேயர்கள் எங்கெல்லாம் இருந்து, தமிழ்ப் பிரிவை தொடர்புக் கொள்கிறார்கள் என்பதை எளிதாக அறிய முடிகிறது. செஞ்சீன மண்ணிலிருந்து ஒலிபரப்பாகும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு ஏறக்குறைய உலகம் முழுவதும் தனது நேயர்களை கொண்டிருப்பது வியப்பளிக்கிறது.
தமிழன்பன் விழுப்புரம் எஸ்.சேகர் அறிவியல் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். மண்ணரிப்பால் பாதிக்கக்கூடிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் பாதிக்காதபடி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாநில அரசுகளின் முயற்சிகளை இந்நிகழ்ச்சியில் அறிய முடிந்தது. இந்த நடவடிக்கைகளால் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட்டு உற்பத்தியில் பெரும் இலாபம் அடைந்த விவசாயின் மகிழ்ச்சியை அவரது குரலை கேட்டபோது உணர முடிந்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040