திருச்சி அண்ணாநகர் V.T. இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல். சீன வறுமை ஒழிப்புப் பணியின் முன்னேற்றம் பற்றிய செய்தி விளக்கம் கேட்டேன். வறுமை ஒழிப்பில் நிதி நெருக்கடியின் எதிர்மறை பாதிப்புகளைக் குறைக்க, ஒதுக்கீட்டை அதிகரிப்பது, விவசாய தொழிலாளருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்குவது, சுய தொழில்களை ஆதரிப்பது போன்ற நடவடிக்கைகளை சீனா செயல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட 300 கோடி யுவானை அதிகரித்து, மொத்தமாக 2000 கோடி யுவானை இவ்வாண்டு ஒதுக்கீடு செய்திருப்பது வறுமை ஒழிப்பில் சீன நடுவண் அரசு காட்டும் ஆழமான அக்கறையையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் துணை அரசுத் தலைவர் ஷிசீன்பிங் ஜப்பான், தென்கொரியா, மியான்மார், மற்றும் கம்போடியா ஆகிய நான்கு நாடுகளின் பயணத்திற்கு முன்பு செய்தி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். இந்த நான்கு நாடுகளின் அரசுகளின் பல்வேறு வட்டாரங்களுடன் பரந்த அளவில் தொடர்பு, இருதரப்பு பிரச்சனைகள் பற்றி கருந்துகளை பரிமாறுவது பற்றிய அவரது கருத்துக்கள் சீனா அண்டை நாடுகளுடன் கூட்டாளி நல்லுறவை வலுப்படுத்தி, ஒத்துழைப்பை ஆழமாக்கி கொள்ள விரும்புவதையே சுட்டுகிறது.
முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் மட்டும் கடந்த பத்தாண்டுகளில் 180 பண்டாக்கள் இனப்பெருக்கம் மூலமும், 240 செயற்கையாகவும் பெருகி பாதுகாப்பாக வளர்ந்து வருவதை அறிந்தேன். இங்குள்ள வனக் காப்பகத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன். சீனாவின் செல்ல விலங்காக பாதுகாக்கப்படும் பண்டா விளையாடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். 2008 ஆம் ஆண்டில் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சீன அரசு பண்டாக்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகளை உலகமே பாராட்டியது.
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியி்ல் அன்பார்ந்த குடும்பம் என்ற கட்டுரையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். கொரிய இனத்தைச் சேர்ந்த லீவென்சோ, பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த 33 ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்கும் வகையில் அன்பார்ந்த குடும்பத்தை தனது சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளதை அறிந்தபோது மனம் நெகிழ்கின்றது. ஆறு வயது சிங்கோவை கவனித்து கொள்வது, அவருடைய தாத்தாவின் ஈமச்சடங்கு செலவை லீவென்சோ ஏற்றுக்கொண்டது அனைத்தும் அவரது தன்னலமற்ற சேவை உள்ளத்தை புரிய வைக்கிறது. இந்த மகத்தான மனிதர் லீவென்சோ நீண்டகாலம் நலமுடன் வாழ எனது அன்பான வாழ்த்துக்கள்.
தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
காலநிலை மாற்றம் பற்றிய கோப்ன்ஹேகன் மாநாட்டின் தீர்மானங்களை செய்திவிளக்கத்தில் செவிமடுத்தேன். ஐநா பெரும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். சீனா தானாகவே கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க தீர்மானித்திருப்பது அனைவராலும் பாராட்டப்படுகின்றனது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அதை தடுக்க சீனா மேற்கொண்டுள்ள தடுப்பு பணிகளையும் தென்பொன்முடி ஊர் பொது மக்களுக்கு எடுத்துக் கூறிவருகிறேன். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அறிவுறுத்தி இலவசமாக மரக்கன்றுகளை வாங்கி கொடுத்து என்னால் இயன்ற பணியை செய்துவருகிறேன்.
திருச்சி பி.எஸ்.பரசலுர் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
33 விழுக்காடு இட ஒதுக்கீடு மகளிர் மாசோதா இந்திய மேல்சபையில் நிறைவேற்றியுள்ளதை செய்திகளில் கேட்டேன். இந்தியாவின் பல மகளிர் அமைப்புகள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன., இந்திய வரவு செலவுத் தொடரின்போது, நாடளுமன்ற உறுப்பினரால் விவாதிக்கப்படும் இந்த மசோதா நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளதையும் அறிந்தேன்.