• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
செஞ்சிலுவை சங்கத் துறையின் வளர்ச்சி
  2010-01-11 15:00:52  cri எழுத்தின் அளவு:  A A A   







கே........கலை இன்றைய நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி.
கலை......கே வேலுச்சாமி வணக்கம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நாங்கள் ஒத்துழைத்து நேயர் நண்பர்களுக்கு சேவை புரிவது இதுவே முதல் முறை. அப்படிதானே?
கே........ஆமாம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
கலை......இது பற்றி எனக்கு மிகவும் தெளிவாக தெரியும். ஏனென்றால் எனது கையில் உள்ள பல கேள்விகளில் உங்கள் பெயர் எழுதப்பட்ட தகவல் என் கண்களின் முன்னால் உள்ளது.
கே........ இப்படி நீங்கள் என்னை பாராட்டுவதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். நான் சீனா பற்றிய அதிக தகவல்கள் அறிய ஆர்வம் கொண்டுள்ளேன்.
கலை......நல்ல செய்தி. பல வினாக்களில் சீன செஞ்சிவை சங்கத்தின் பங்கு, வளர்ச்சி, பன்னாட்டு விவகாரங்களில் தொண்டு பற்றி நீங்கள் கேட்ட கேள்விகள் எனது கையில் உள்ளன.
கே........ஆகவே இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சீன செஞ்சிலுவை சங்கம் பற்றி விவாதிக்கலாமா?


கலை......தாராளமாக. அக்டோபர் 27ம் நாள் சீன செஞ்சிலுவை சங்கத்தின் 9வது மாநாட்டில் 42வது நைட்டிங்கல் விருது வழங்கும் விழா பெய்சிங்கில் நடைபெற்றது.
கே........ஆமாம். அக்டோபர் 27ம் நாள் ஒலிபரப்பப்பட்ட இது பற்றிய செய்தியை கேட்டேன். சீன அரசுத் தலைவரும் சீன செஞ்சிலுவை சங்கத்தின் கௌரவத் தலைவருமான ஹுச்சிந்தாவ் மருத்துவ துறையில் நோயாளிகளுக்கு தலைசிறந்த சேவை புரிந்த 6 செவிலியருக்கு பதக்கங்களை வழங்கியதாக அறிந்தேன்.
கலை......இந்த 6 செவிலியர்களில் ஒருவர் கடந்த மே திங்கள் சிச்சுவான் மாநிலம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வேளையில் காயமடைந்தோருக்கு சிறந்த முறையில் சேவை புரிந்தவராவார்.
கே........அப்படியா. மகிழ்ச்சி. அடுத்து சர்வதேச செஞ்சிலுவை சங்க இயக்கத்தில் முக்கிய உறுப்பினராக விளங்கும் சீன செஞ்சிலுவை சங்கம் பேரிடர் குறைப்பு, உடனடி மீட்புதவி, மனித நேய சேவை முதலிய துறைகளில் என்னென்ன செய்துள்ளது?இவற்றை விபரமாக குறிப்பிடுங்கள்.
கலை......விபரங்களுடன் விளக்கிக் கூறுகின்றேன். சீன செஞ்சிலுவை சங்கம் 1904ம் ஆண்டில் நிறுவப்பட்டது. சீனாவில் மிகவும் செல்வாக்கு கொண்ட மனித நேய உதவி நிறுவனமாக இது பாராட்டப்படுகின்றது.
கே........1904ம் ஆண்டில் நிறுவிய இச்சங்கம் அப்போது முதல் எந்த சேவையில் அதிக பங்கினை வெளிக்கொணர்ந்துள்ளது?


கலை......பாருங்கள். போர் ஏற்பட்டபோது காயமுற்ற படையினரை இது காபாற்ற உதவியது. அகதிகளுக்கு உதவி செய்தது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை திரட்டி அளித்தது. கடந்த சில ஆண்டுகளில் இந்துமாகடலில் ஆழிபேரலை ஏற்பட்ட போது சர்வதேச நிவாரணப் பணியில் பங்கு எடுத்தது. ஸ்ச்சுவான் மாநிலத்தில் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட பின் அப்பிரதேசத்துக்கான நிவாரண பணியிலும் பாதிக்கப்பட்ட பிரதேங்களின் மறுசீரமைப்பிலும் சீன செஞ்சிலுவை சங்கம் அதன் முக்கிய பங்களிப்பை வெளிக்கொணர்ந்ததோடு பல உதவிகளையும் வழங்கியது.
கே........சீன செஞ்சிலுவை சங்கம் ஆற்றிய முயற்சிகளால் உலகளவில் மிக பெரிய தொண்டர் நிவாரண நிறுவனமாக மாறியுள்ளது செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தின் கிழக்காசிய பிரதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் தலைவர் காரல் நாக்லர் மனித நேய துறையில் சீன செஞ்சிலுவை சங்கம் ஆற்றிய பங்கை எப்படி மதிப்பிடுகிறார்?
கலை......அவர் கூறிய பாராட்டை கேளுங்கள்.

தமிழன்பன்........2008ம் ஆண்டில் சீனாவின் வென்ச்சுவான் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலநடுக்கம் சீனாவின் தென்மேற்குப் பிரதேசத்தின் பெரும்பான்மையான இடங்களை பாதித்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை இதனால் மேள்விக்குறியானது. சீன செஞ்சிலுவை சங்கம் உற்சாகத்துடன் பேரிடர் குறைப்பு மற்றும் இயற்கை சீற்றத்துக்கு பிந்தைய புனரமைப்பில் ஈடுபட்டது. சீன மக்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் செஞ்சிலுவை சங்கங்கள் மற்றும் செம்பிறை சங்கங்களின் ஆதரவுடன் சீன செஞ்சிலுவை சங்கம் முன்கண்டிராத அளவில் நன்கொடை திரட்டி பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவியையும் ஆறுதலையும் வழங்கியது.
கே........இந்த தகவலால் நான் மிகவும் ஆறுதலடைகின்றேன். பேரிடர் குறைப்பு தவிர சீன செஞ்சிலுவை சங்கம் வேறு என்னென்ன பங்கை வெளிக்கொணர்ந்துள்ளது?
கலை......எயிட்ஸ் நோய் தடுப்பு பற்றிய பரப்புரை உள்ளிட்ட மருத்துவ மீட்புதவி, புதிய ரக கிராமப்புற ஒத்துழைப்பு மருத்துவ முறை போன்ற மனித நேய சேவைத் துறைகளிலும் சீன செஞ்சிலுவை சங்கம் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றது.


கே........உள்நாட்டில் நிலைமை இப்படியிருக்க, சர்வதேச ரீதியில் சீன செஞ்சிலுவை சங்கம் என்ன சேவை புரிந்துள்ளது?
கலை......2004ம் ஆண்டு இந்துமாகடலில் சுனாமி நிகழ்ந்தநிசயமே சீன செஞ்சிலுவை சங்கம் மொத்தம் 40 கோடி யுவானை திரட்டி பாதிக்கப்பட்ட 11 நாடுகளுக்கு அவசர உதவி வழங்கியது. இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 1500 நிரந்தர வீடுகளை கட்டியமைக்க நிதி உதவி வழங்கியது. அதேவேளையில் திறனாற்றல் உருவாக்கத்தை வலுப்படுத்துவதில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் செஞ்சிலுவை சங்கங்களுக்கு உதவும் வகையில் ஆய்வு பயிற்சி வகுப்புகளை நடத்தியது. இதன் மூலம் சீன மக்களின் அமைதியான அனைவராலும் விரும்பப்படுகின்ற இளகிய மனம் ஆகியவை உலகிற்கு காட்டப்படுகின்றன.
கே........மனித குலத்திற்கு சீன செஞ்சிலுவை சங்கம் பல நன்மை செய்ததது. அரசுசாரா துறைகளில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுவது குறித்து சீன அரசின் மனபான்மை என்ன ?
கலை......இது பற்றி எங்கள் துணை தலைமை அமைச்சர் குவே லியான் யூ தெரிவித்த கருத்தை கேளுங்கள்.

தமிழன்பன்........சீன நிலைமையில் காலூன்றி நின்று சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சர்வதேச செஞ்சிலுவை சங்க இயக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை நிவாரணம் கொடுத்தல், முதியோருக்கும் உடல் சவால்மிக்கவருக்கும் மதிப்பு அளித்து உதவதல், நன்கொடை அளிப்பது உள்ளிட்ட சீனப் பாரம்பரிய நற்பண்புகளுடன் பயன் தரும் முறையில் ஒருங்கிணைக்க வேண்டும். இம்முயற்சிகளின் மூலம் சீன செஞ்சிலுவை சங்கத் துறையின் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும்.
கே........துணை தலைமை அமைச்சர் குவே லியாங் யூ தெரிவித்த கருத்தை கேட்டு சீன செஞ்சிலுவை சங்கம் உலகத்திற்கு நன்மை செய்வதற்கு அரசின் அடிப்படை வழிகாட்டுதல் இருப்பதை நான் புரிந்து கொண்டேன்.
கலை......அக்டோபர் 27ம் நாள் நடைபெற்ற மாநாட்டில் சீன செஞ்சிலுவை சங்கத்தின் 2010-2014ம் ஆண்டு வரையான ஐந்தாண்டு வளர்ச்சி திட்டம் விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.


கே........மாநாட்டில் புதிய செயற்குழுவும் செயல்குழுத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்லவா?
கலை......ஆமாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற மாநாட்டில் பல விடயங்கள் கையாளப்படுகின்றன. சீன செஞ்சிலுவை சங்கம் பற்றி மிக பல தகவல்களை நேயர்கள் அறிந்து கொள்வதை விரும்புகின்றேன்.
கே........நானும் அப்படியே.
கலை......ஆகவே இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நாம் மீண்டும் இது பற்றி தகவல்களை பரிமாறி கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040