• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனர் உயிர் காத்து வரலாறு படைத்த ஜெர்மானியர்
  2010-01-12 09:36:29  cri எழுத்தின் அளவு:  A A A   







இப்போது சீனர்களின் சர்வதேச நண்பர்களது வாழ்க்கை மற்றும் கதைகள் நட்புப் பாலம் நிகழ்ச்சியில் தனித்தனியாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடந்த நிகழ்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை கண்டு உறுதிப்படுத்திய புகழ் பெற்ற செய்தியாளர் திரு Israel Epstein பற்றி கூறினோம். இன்றைய நிகழ்ச்சியில் சீன மக்களின் உயிரை பாதுகாத்து வரலாறு படைத்த ஜெர்மானியர் ஜான் ராபே பற்றி கூறுகின்றோம்.
1937ம் ஆண்டு ஜப்பான் சீனாவின் நான்சிங் நகரில் சீன மக்களையும் சீன படைவீரர்களையும் படுகொலை செய்த போது ஜெர்மானியர் ஜான் ராபே சீன மக்களை பாதுகாக்க தன்னார்வத்துடன் முன்வந்தார். அவரது துணிவாலும் அவரது அப்போதைய நாட்குறிப்பாலும் சீன மக்களின் உயர் மதிப்பை ஜான் ராபே பெற்றார். 40 இலட்சம் வாக்குகளை பெற்று கடந்த 100 ஆண்டுகளில் சீனாவில் மிகவும் அதிகமான செல்வாக்கு ஏற்படுத்திய பத்து சர்வதேச நண்பர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் ராபேயின் மூத்த பேரன் தாமாஸ் ராபே தாத்தாவின் சார்பாக பெய்ஜிங் வந்து பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டதோடு சீன வானொலிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தாத்தாவின் கதையை விவரித்தார். தாமாஸ் ராபே இப்போது ஜெர்மனின் Hambrag பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ மனையின் மகளிர் நோய்ப் பிரிவு நிபுணராக பணிபுரிகின்றார். அவருடைய தாத்தா ஜான் ராபே 1882ம் ஆண்டு ஜெர்மனியின் Hambragக்கில் பிறந்தார்.

1908ம் ஆண்டு அவர் சீனா வந்து shenyang, பெய்ஜிங், தியன் சின், ஷாங்காய், நான்சிங் முதலிய இடங்களில் வியாபாரம் செய்தார். 1931ம் முதல் 1938ம் ஆண்டு வரையான காலத்தில் அவர் ஜெர்மனி சீமன்ஸ் நிறுவனத்தின் நான்சிங் கிளைப் பிரதிநிதியாக பணி புரிந்தார். 1937ம் ஆண்டு ஜப்பான் நான்சிங்கை ஆக்கிரமிப்பதற்கு முன் ராபேயும் நான்சிங்கில் வாழ்கின்ற இதர வெளிநாட்டவர்களும் இணைந்து நான்சிங் பாதுகாப்பு மண்டலத்தை நிறுவினர். அந்த மண்டலத்தின் சர்வதேசக் குழுவையும் கூட்டாக நிறுவினர். ஜான் ராவே இக்குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்சிங் படுகொலை நிகழ்ந்த போது நீதியான புனித உணர்வுடன் அவர் 4 சதுர கிலோமீட்டர் நிலபரப்புக்குட்பட்ட பாதுகாப்பு மண்டலத்தில் மற்ற வெளிநாட்டவர்களுடன் 2 லட்சம் சீன மக்களின் உயிரை பாதுகாத்தார். அவருடைய மனித நேய முயற்சி உலக மக்களின் உள்ளத்தில் ஆழ பதிந்து விட்டது. இதற்காக சீனவின் Oskar Schindler மற்றும் நல்ல நான்சிங் வாசி என்ற புகழை ஜான் ராபே பெற்றார்.
சிறுவயதிலே பாட்டியிடமிருந்து தாத்தாவின் நான்சிங் வாழ்க்கையை தாமாஸ் ராபே அடிக்கடி கேட்டறிந்தார். இது பற்றி அவர் கூறியதாவது.
நான்சிங்கில் தாத்தா நடந்து கொண்டது ஜெர்மானியருக்கும் சீன மக்களுக்குமிடை இருந்த ஆழமான நட்பை காட்டியது. இது மனித நேய கடப்பாடாகும். இன்னல்களில் சிக்கியுள்ள நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தாத்தா தீர்மானித்தமை நண்பர்களுக்கிடையில் நிலவும் உண்மையான நட்பை கோடிட்டுக் காட்டியது. எனது தாத்தா ஜான் ராபேயின் அடுத்த தலைமுறையான நான் என் தாத்தா செய்த செயலுக்காக மிகவும் பெருமையடைகின்றேன் என்று அவர் கூறினார்.
சீனாவும் சீன மக்களும் என் தாத்தாவின் உள்ளத்தில் ஆழ பதிந்துள்ளனர். இது பற்றி தாமாஸ் ராபே கூறியதாவது.


தாத்தா சீன மக்களிடம் நட்புடன் பழகினார். சீனாவின் பாரம்பரிய பண்பாடு அப்போதைய அவரது வாழ்க்கை மற்றும் பணி சூழ்நிலை தாத்தாவின் நினைவில் தெளிவாக இருந்தன. சீன மக்களின் மீதான ஆழந்த புரிந்துணர்வு தான் தாத்தாவுக்கு ஆழமாக செல்வாக்கை ஏற்படுத்தியது. இல்லாவிட்டால் ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்த போது எனது தாத்தா நான்சிங்கில் இருந்து அப்பாவி சீன மக்களை பாதுகாத்திருக்க மாட்டார் என்றார் தாமாஸ் ராபே.
சீனாவில் ஜான் ராபேயின் அனுபவம் அவரது குடும்பத்துக்கு மாபெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இது பற்றி பேராசிரியர் தாமாஸ் ராபே கூறியதாவது.
என் தந்தை பெய்ஜிங்கில் பிறந்தார். 14 வயது வரை அவர் சீனாவில் வாழ்ந்தார். சீனாவில் அவர் பெற்ற அனுபவங்களை அனைவரும் வீட்டில் அடிக்கடி நினைத்து பேசிக் கொள்வதுண்டு. குழந்தைகளாகிய எங்களை பொறுத்தவரை, சீனா கற்பனை வாய்ந்த நாடு. சீனாவில் 30க்கும் மேலான ஆண்டுகள் எங்கள் முன்னோர் வாழ்ந்தார்கள். சீனர்கள் என்னிடம் அன்புடன் பழகினர். அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளும் போது பார்த்து கொண்டு பக்கத்தில் வளா இருக்க கூடாது என்று என் தாத்தா கூறியுள்ளார். ஆகவே தான் அவர் உயிரையும் பொருட்படுத்தாமல் சீன மக்களுக்கு உதவி வழங்கினார். என் குடும்பம் அவருக்காக பெருமையடைகின்றது என்று தாமாஸ் ராபே வர்ணித்தார்.


"ராபேயின் நாட்குறிப்பு" அச்சிட்டு வெளியிடப்பட்டது அதை திரைப்படமாகவும் எடுத்து திரையிட்டனர். நான்சிங் நல்லவர் என்ற சிறப்பு பெற்ற ஜான் ராபே மென்மேலும் மக்களின் கவனத்தை ஈர்த்தார். அவரது தாத்தா அதிகமான வாக்குகளின் மூலம் பத்து சர்வதேச நண்பர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை அறிந்து தாமாஸ் ராபே மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். இது பற்றி அவர் கூறியதாவது.
பத்து சர்வதேச நண்பர் தேர்வு நடவடிக்கையின் பின்னணி பற்றி எங்களுக்கு துவக்கத்தில் அவ்வளவாக தெரியாது. வாக்கெடுப்பு உயர்மட்ட நிலையை அடைந்த பின்தான் இது பற்றி ஓரளவு அறிந்து கொண்டோம். மேலும் என் தாத்தா கூடுதலாக வாக்குகளை பெற்ற இரண்டாவது மனிதர் என்ற செய்தியை அறிந்த பின் என் குடும்பத்தினர் அனைவரும் மிகவும் பெருமையடைந்தனர். இந்த பெருமை தாத்தா வாழ்ந்த போது யோசிக்க முடியாது என்று தாமாஸ் ராபே கூறினார்.
தாத்தா ஆற்றிய உயிர்காப்பு பணி நடந்து 70 ஆண்டுகள் கழிந்து விட்டன. தற்போது மருத்துவராகிய தாமாஸ் ராபே உயிர்களின் பாதுகாப்பை அவரது முதல் கடமையாக கருதுகிறார். உயிர்களை பாதுகாப்பது அவரை பொறுத்தவரை மேலும் ஆழந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


"ராபேயின் நாட்குறிப்பு"எனும் திரைப்படத்தில் உயிரை பாதுகாப்பது உலகை மீட்பதாகும் என்ற கருத்து உள்ளது. இது மிகவும் சரியானது. தாத்தா நான் பின்பற்ற வேண்டிய முன்னோடியாவார். அவரை போல செயல்பட்டு முயற்சிகள் மூலம் அமைதி பணிக்கு பங்கு ஆற்ற விரும்புகின்றேன். என் பார்வையில் உயிர் மிகவும் முக்கியமானது. மக்கள் இதை மதிக்க வேண்டும். மருத்துவரான நான் சீன மருத்துவர்களுடன் அடிக்கடி கல்வியியல் பரிமாற்றம் மேற்கொண்டு இளம் மருத்துவ வல்லுனர்களுக்குப் பயிற்சியளிக்க உதவுகின்றேன் என்று தாமாஸ் ராபே கூறினார்.
தாத்தா வாழ்ந்த போது பின்பற்றிய இலட்சியம் இப்போது தாமாஸ் ராபேயின் உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்துள்ளது. இதற்காக அவரும் அவரது துணைவியாரும் Hambragக்கில் ஜான் ராபே பரிமாற்ற மையத்தை நிறுவினர். வெவேறான பண்பாடுகளுக்கிடை பரிமாற்றத்தையும் புரிந்துணர்வையும் முன்னேற்ற அவர்கள் பாடுபட்டு வருகின்றனர். இம்மையத்தில் முக்கிய வரலாற்றுப் பதிவேடுகள் காட்சிக்கு வைக்கப்படுவது மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் அறிஞர்களின் வரலாற்றை ஆராயும் வசதியும் வழங்கப்படுகின்றது. இது பற்றி தாமாஸ் ராபே கூறியதாவது.
மேன்மை, துணிவு, அறிவை பெறும் ஆர்வம், ஆய்வு எழுச்சி ஆகியவை இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். வினாவை முன்வைத்து பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பதன் மூலம்தான் முன்னேறும் திசையை கண்டறியலாம் என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040