• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மின்னஞ்சல் மூலம் தெரிவித்த கருத்துக்கள்
  2010-01-14 10:54:13  cri எழுத்தின் அளவு:  A A A   







விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
கூட்டு வளர்ச்சியை வெளியுறவுக் கொள்கையில் கடைப்பிடித்து இணக்கமான உலகை அமைக்க சீனா தொடர்ந்து பாடுபடும் என்று சீன அரசுத் தலைவர் புத்தாண்டு உரையில் கூறியது நட்பார்ந்த உலகின் தத்துவமாகும். தங்கத்தை விட, நிதியைவிட நம்பிக்கையே முக்கியம், பெரியது என்று காலநிலை மாற்றம் பற்றிய உலக அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளை குறிப்பிட்டபோது சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் கூறியிருக்கிறார். சாதிக்க வேண்டுமென்ற நம்பிக்கையிருந்தால் சாதனைகள் கைகூடும் என்பதை திருக்குறள் போல இச்சொற்களில் சுருக்கிவிட்டார்.


பாண்டிச்சேரி N.பாலகுமார் அனுப்பிய மின்னஞ்சல்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். சீன தேசிய அதி உயர் அறிவியல் தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டதை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் கேட்டேன். கடந்த பல ஆண்டுகளாக சீனாவுக்காகு ஆற்றியுள்ள கடமைகளுக்கு மதிப்பளிப்பதாக அறிவியலாளாகளை சீன அரசு கௌரவித்துள்ளது. விருது பெற்றவாகள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவரவர் துறையில் சிறப்பாக பணியாற்றியதும், 80 வயது கடந்தவர்கள் என்பதையும் கேட்டு வியப்பு அடைந்தேன். பரிசு பெறுபவர்களுக்கு வயது தடையல்ல அனுபவமே சிறந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டு


வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் காலநிலை மாற்ற சமாளிப்புப் பணி என்ற கட்டுரையைக் மக்கள் சீனம் நிகழ்ச்சியில் கேட்டேன். காலநிலை மாற்றப் பிரச்சனையின் தீர்வுக்கு மேற்கொள்ள வேண்டிய முடிவுகளுக்காக வளர்ந்த நாடுகளே தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், 2005 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட பசுங்கூட வாயுக்களின் அளவில் 40 முதல் 45 விழுக்காடு வரை குறைக்கின்ற இலக்கை சீனா தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்பின் மூலம், உலக நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியான நாடாக சீனா மாறிவிட்டது.


நாகர்கோயில் ஸ்டெல்லா ஷர்மிலா அனுப்பிய மின்னஞ்சல் திபெதின் மொத்த உற்பத்தி மதிப்பு பற்றிய தகவலை சீன வானொலி ஒளிபரப்பியது. 2009-ஆண்டில் திபெதின் மொத்த உற்பத்தி மதிப்பு கடந்த ஆண்டை விட 13 விழுக்காடு அதிகரித்திருப்பது அங்கு ஏற்பட்ட வளர்ச்சியை காட்டுகிறது. மேலும், இவ்வாண்டு திபெத்துக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் 58 இலட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்து, அதிக எண்ணிக்கையாகவும் பதிவாகியுள்ளது.


மதுரை என்.ராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
சீனா இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இல்லாமல்,. அவற்றுக்கிடையில் போட்டியும் ஒத்துழைப்பும் கொண்ட உறவு நிலவுகிறது. இதனை தவறுதலாக வெளியிடுவது கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சரே தெரிவித்துள்ளார். உலகில் வளரும் இருநாடுகளுக்கு இடையில் நலமான போட்டி தானேயொழிய நல்லுறவை பாதிக்கும் போட்டியல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


ஈரோடு .சி.சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்
சீனச் சமூகவாழ்வு நிகழ்ச்சியில் டாக்சிங் எண்ணெய் வயலில் பணிபுரியும் சாதாரண தொழிலாள‌ர் குடும்பம் பற்றிய ஒலிபரப்பை கேட்டேன். தற்போது 82 வயதான ஒரு தொழிலாளி, ராணுவத்தில் இருந்து விலகிய பிறகு தன்னுடைய 32 வது வயதிலிருந்தும், அவரது மகன் 1976 ஆம் ஆண்டிலிருந்தும், எண்ணெய் தொழிலாளர் அணியில் அவரது மகளும் பணியாற்றி வருகின்றனர். தொடக்கக் காலதில் ஏற்பட்ட இன்னல்களை பொருட்படுட்தாமல் நாட்டிற்காக பணிபுரிவதில் பெருமையடைவதாக தெரிவித்ததை கேட்டபோது அவர் வயதில் தான் முதுமை, மனதில் இல்லை என்ற உணர்வு பெற்றேன்.


மெட்டாலா, எஸ். பாஸ்க்கர் அனுப்பிய மின்னஞ்சல்
சீன உற்பத்திப் பொருட்கள் பற்றிய வெளிநாட்டு தூதர்களின் கருத்துக்களை மக்கள் சீனம் நிகழ்ச்சியில் கேட்டேன். சீன உற்பத்திப் பொருட்கள் உயர் தரம் வாய்ந்தவை. உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் அதாவது சந்தைக்கு வருவதற்கு முன் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தரம் பிரிக்கப்படுவதே இதற்கு காரணமாகும். சீன உற்பத்திப் பொருட்களை பலரும் நம்பி வாங்குவதே அவற்றின் தரத்தை காட்டுகிறதல்லவா!
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் சமூகக் கட்டமைப்பு பற்றிய தகவல்களை செய்தி விளக்கத்தில் கேட்டேன். சீனாவைப் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இது அமைந்தது. பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையே நிலவும் சமனற்ற நிலையை ஒப்பிடும்போது சீனாவின் சமூக கட்டமைப்பு 15 ஆண்டுகள் பின் தங்கியுள்ளதை கண்டறிந்து தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பது ஆக்கப்பூர்வ பயன்கள் தரும்.


பகளாயூர் பி.எ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் தற்போதைய வளர்ச்சி உலக பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ செல்வாக்கு ஏற்படுத்தியுள்ளது வெளிப்படை.. குறிப்பாக சீனப் பொருளாதாரத்தின் தலைசிறந்த வளர்ச்சி 2009ம் ஆண்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் தொலைபேசி மற்றும் இணைய தள வசதி பயன்பாடு தகவல்களை சீன வானொலி மூலம் கேட்டேன். சீனாவின் 99 விழுக்காடு கிராமப்புறங்களில் தொலைபேசி வசதியும், 99 விழுக்காடு வட்டம் மற்றும் சிறிய நகரங்களில் இணைய தள வசதியும் உள்ளன. இது, புதிய கணினி காலத்தின் பயன்களை அனைவரும் பெற உதவும்.


பரசலூர் PS.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
நட்ப்புப்பாலம் நிகழ்ச்சியில் போலந்தில் பிறந்து, சீனாவில் குடியேறிய இஸ்ரேல் அஸ்தான் செய்தியாளர், சீனாவின் பத்திரிக்கை துறையில் திறம்பட செயலாற்றியும், சீன முன்னாள் தலைமையமைச்சர் சூயென் லாய் அவாகளின் அன்பை பெற்றும் அளவில்லா சேவையை சீன மக்களுக்கும், சீனாவுக்கு ஆற்றியிருக்கிறார். சீன நண்பர்களின் பட்டியலில் இடம்பெற செய்து அவரை சீன மக்கள் கௌரவித்தது சிறப்பு.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040