தமிழன்பன் புத்தாண்டின் தொடக்கத்திலேயே 21 வது கருத்தரங்கில் பல நேயர்களை முகமுகமாக சந்தித்து ஊக்கமடைந்துள்ள பலரும், வாரத்திற்கு குறைந்தது 50 கருத்துக் கடிதங்கள் எழுத உறுதிபூண்டு செயல்பட கேட்டுக் கொள்கின்றோம்.
கலை உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு, கணினியில் உலாவர கற்றுக் கொண்டு எங்களுக்கு அதிக கடிதங்களையும், மின்னஞ்சல்களையும் அனுப்ப நீங்கள் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளுக்கும் நன்றிகள். பாராட்டுகள்.
தமிழன்பன் நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு, கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்புகின்றபோது, நிகழ்ச்சியை கேட்டேன், நன்றாக இருந்தது என்று பொதுவாக எழுதினால் போதாது. நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்தை சிறப்பாக எழுதி அனுப்ப கேட்டுக் கொள்கின்றோம். கேட்ட நிகழ்ச்சியை கேட்டதுபோல எழுதி அல்லது தட்டச்சு செய்து அனுப்பாமல் இந்நிகழ்ச்சியை குறிப்பிட்டு அதை பற்றி உங்கள் கருத்துக்களை எழுதி தெரிவிக்க கேட்டுக் கொள்கின்றோம்.
கலை இன்றைய நிகழ்ச்சியின் கடிதப்பகுதியில் முதலாவதாக, நீலகிரி மேல் குந்தா ஆர்.சந்திரன் நேருக்கு நேர் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படும் சீன வானொலி நேயர்களின் கருத்து பரிமாற்றத்தால், நேயர்களாகிய நாங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகளும், அவற்றை சிறப்புற நடைமுறையாக்கிவரும் நேயர்கள் பற்றியும் அறிய முடிகிறது.
தமிழன்பன் அடுத்தாக, இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.என்.எப்.நஷாமா சீன தமிழொலி இதழ் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் திபெத்தில் புகழ்பெற்ற டாங்கா ஓவியங்கள் பற்றி வானொலி நிகழ்ச்சிகளில் கேட்டு தெரிந்து கொண்டேன். அதை பற்றிய பல்வேறு தகவல்களை சீன தமிழோலி இதழும் தந்தது. பள்ளி மாணவர்களான என்னை போன்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
கலை தொடர்வது, திருச்சி எம்.தேவராஜா சீனாவில் சுதந்திரமான மத நம்பிக்கை பாதுகாப்பு பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் பத்து கோடி பேர் மத நம்பிக்கை உடைவர்கள் என அறிந்தேன். புத்த, இஸ்லாமிய, தாவ், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்களின் புத்த மடாலயங்கள், மசூதிகள், தேவாலையங்களின் எண்ணிக்கை மத நம்பிக்கையாளாகள் பெற்றுள்ள சுதந்திரத்தை காட்டுகிறது. மக்களின் மத சுதந்திரத்தை மதித்து சீன அரசு மேற்கொண்டுள்ள கொள்கையளவிலான ஆதரவு பாராட்டுதற்குரியது.
தமிழன்பன் இனி, மறைமலைநகர் மல்லிகா தேவி எழுதிய கடிதம். 500 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த சூரிய கிரகணம் பற்றி சீன வானொலி நிகழ்ச்சிகளில் செவிமடுத்தேன். தற்போது நடைபெற்று வருவது 400 வது வானிலை ஆண்டு என்பதை இந்த நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. சீனாவில் அது எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதையும் இந்நிகழ்ச்சி விளக்கியது.
கலை அடுத்தாக, முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். வானில் பல கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளி மையம் அமைக்கும் திட்டப்பணியை சீனா துவக்கியுள்ளதை அறிந்தேன். 2020 ஆம் ஆண்டு முழுமைபெற்று பலவிதங்களில் பயன்படுத்தப்பட இருக்கும் இந்த விண்வெளி மையம் சாதனைகளின் மைல்கல்லாக இருக்கும். விண்வெளி நுட்பத்தை புரிந்து கொள்வதில் சீனாவை உலகில் முன்னணிக்கு கொண்டுச் செல்லும்.
தமிழன்பன் தொடர்வது, ஆரணி பொன்.தங்கவேலன் எழுதிய கடிதம். சீன மக்கள் குடியரசின் வைரவிழா வாழ்த்துக்களை அறுபது நேயர்கள் வழங்கினர். சீனாவின் 60 ஆண்டுகால வளர்ச்சியை நேயர்களே, சொல்லி வாழ்த்தும் வாய்ப்பை இது வழங்கியது. ஆலமரத்திற்கு விழுதுகள் துணைநின்று தாங்குவது போல சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு நேயர்களாகிய நாங்களே விழுதுகள். எனவே சீனாவுக்கு பெருமை என்றால் எங்களுக்கும் பெருமையே.
கலை இனி, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் காலநிலை மாற்றம் குறித்து அனுப்பிய கடிதம். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. தொழில் நுட்ப புத்தாக்கம், தொடரவல்ல எரியாற்றல், எரியாற்றல் சிக்கனம் என முயற்சிகள் தொடர்கின்றன. சீனா கரி வெளியெற்றத்தை குறைக்கும் இலக்கை தானாகவே முன்வந்து வெளியிட்டது. புவி வெப்பமடைவதை தடுக்க சிறந்த வழி சைவ உணவுகளை உண்பதென பிராங்ஃபோர்டை சார்ந்த நிபுணர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அசைவ உணவை சமைக்கும்போது, அதிக நீரும், எரியாற்றலும் தேவைப்படுகிறது. எனவே நமதூரைில் சைவ உணவை பரப்புரை செய்தோர் முன்னரே இது பற்றி தெரிந்திருப்பாரோ என்ற எண்ணம் எழுகிறது.
தமிழன்பன் அடுத்து, பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன திருமணங்கள், அதில் கடைபிடிக்கப்படும் பண்பாட்டு பழக்கவழக்கங்கள், இப்போதைய திருமணங்கள் , திருமணச் சடங்குகள், சட்டங்கள் என பல விபரங்களை அறிய காத்திருந்த எங்களுக்கு அனைத்தையும் தெளிவுபடுத்துவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது. கேள்விகள் கேட்கப்பட, விடையளித்த விதமும் சிறப்பாக இருந்தது.
கலை தொடர்வது, இலங்கை கினிகத்தேனை எம்.பி.மூர்த்தி உங்கள் குரல் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். வேளான்மை துறை பற்றி முன்னார் இந்திய அரசுத்தலைவர் அப்துல்கலாம் வழங்கிய அறிவுரையும், அவர் சென்ற இடமெல்லாம் சிறந்த வரவேற்பு பெற்றதையும் இந்நிகழ்ச்சி வழியாக அறிந்தேன். நேயர் மன்றங்களின் பங்களிப்பை வளர்க்கும் நிகழ்ச்சி இது என்றால் மிகையில்லை.