வணக்கம் நேயர்களே. 2010ம் ஆண்டில் நுழைந்த பின் 2009ம் ஆண்டுக்கான சிறந்த, தலைசிறந்த நேயர்கள் மற்றும் சிறந்த நேயர் மன்றப் பெயர் பட்டியல் வெளியிடோம். இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் பெய்ஜிங் மாநகர் பற்றி முன்வைத்த வினாக்களுக்கு விடை அளிக்கின்றாம். மாநகரின் தோற்றம், அதன் வரலாறு, மத நம்பிக்கை, பண்பாடு, நகர பரவல், நகரின் தனிச்சிறப்பியல்பு முதலிய அம்சங்களை தி. கலையரசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். கேட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
இப்போது பெய்ஜிங் சீனாவின் தலைநகராகும். நகராட்சியின் பணியிடம் நகரின் கிழக்குப் பிரதேசத்தில் அமைகின்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பெய்ஜிங் மாநகரக் கமிட்டிச் செயலாளர் லியூச்சி. மேலாளர் கோச்சின்லுங்.
நகராட்சியின் கீழுள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை 16. மாவட்டங்களின் எண்ணிக்கை 2.
கடல் மட்டத்தின் 43.5 மீட்டரில் அமைந்துள்ள பெய்ஜிங் மாநகரின் மிக உயர்ந்த இடம் கிழக்கு லீங் சாங் மலையாகும். அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2303 மீட்டராகும்.
வரலாற்றில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே பெய்ஜிங் நகர் உருவாகியது. 850 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் தலைநகராக நியமிக்கப்பட்ட அனுபவம் இதற்கு உண்டு. சிங் வம்சகாலம் தொட்டு பெய்ஜிங் சீனாவின் வடப் பகுதியில் முக்கிய இராணுவ மற்றும் வணிக இடமாக இருந்து வந்துள்ளது. jincheng,yandu,yanjing,zhuojun,youzhou,nanjing,zhongdu,dadu,jingshi,shuntianfu,beiping,beijingஎன்ற பெயர்களை முறையே பெற்று சற்போது பெய்ஜிங் என்றழைக்கப்படுகின்றது.